• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TNPSC Group 4 Exam 2026: திருச்சிராப்பள்ளியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் – கலந்துகொள்வது எப்படி?

TNPSC Group 4 Exam 2026: திருச்சிராப்பள்ளியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் – கலந்துகொள்வது எப்படி?

Written ByKarthikeyan Sekar
Published: Oct 20, 2026, 10:02 AM IST|Updated: Oct 20, 2026, 10:16 AM IST
joinshare
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள்: திருச்சியில் தொடங்கியது. இன்னும் சேர விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

திருச்சியில் இலவசப் பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

TNPSC Group 4 2026: Free Coaching Classes1/6

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ள நிலையில், 6,574 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் [https://tnpsc.gov.in](https://tnpsc.gov.in) என்ற இணையதளம் வழியாக வரும் நவம்பர் 5, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 2026: Free Coaching Classes2/6

திருச்சி தொழில்நெறி வழிகாட்டும் மையம்

இத்தேர்வுக்குத் தயாராகும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வரும் இப்பயிற்சி இங்கு முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது.
TNPSC Group 4 2026: Free Coaching Classes3/6

குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கான இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த அக்டோபர் 15, 2026 அன்று காலை 10.00 மணிக்கு முறைப்படி தொடங்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தத் தகவல் தாமதமாகத் தெரிந்தவர்கள் மற்றும் இதுவரை இணையாத போட்டித்தேர்வர்கள், தற்போதும் நேரில் சென்று வகுப்பில் இணைந்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 2026: Free Coaching Classes4/6

இப்பயிற்சி வகுப்புகள்

இப்பயிற்சி வகுப்புகளில் அனுபவம் வாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் விரிவான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், தேர்வர்களின் தயார் நிலையைச் சோதிக்கும் வகையில் பாடவாரியான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுவதுடன், தேவையான முக்கியப் பாடக்குறிப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
TNPSC Group 4 2026: Free Coaching Classes5/6

போட்டித்தேர்வர்களுக்கான அரிய வாய்ப்பு

அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாகப் படித்து வரும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள அனைத்துப் போட்டித்தேர்வர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC Group 4 2026: Free Coaching Classes6/6

கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள

இப்பயிற்சி வகுப்பில் இணைவது மற்றும் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413524 மற்றும் 9499055902 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார்
TAGS:
TNPSC

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை: சென்னையில் ஆட்சேர்ப்பு - டிகிரி / டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை: சென்னையில் ஆட்சேர்ப்பு - டிகிரி / டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

2

புதிய தலைமைச் செயலகமாக மாறும் பல்லவன் இல்லம் – ஒரு வாரத்தில் அதிரடி முடிவு! Explained

3

சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 3 ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

4

தங்கம், கச்சா எண்ணெய் முதல் தலால் ஸ்ட்ரீட் பங்குகள் வரை: AI மூலம் கமாடிட்டி சந்தையை எளிதாக்கும் க்வாலா இன்டெல்

5

அனிருத்-காவ்யா திருமணம்! 4 குடும்பங்கள் மட்டும் தனி விமானத்தில் கிரீஸ் பயணம்..யார் யார்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.