இசையமைப்பாளர் அனிருத்திற்கும், காவ்யா மாறனுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைப்பெற்று வருகிறது. இவர்களின் திருமணம் நடக்கப்போவது இந்தியாவில் இல்லை, வெளிநாட்டில். இதனால், அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமடைண்நிருக்கின்றன. அது குறித்த ஒரு தகவல்தான் தற்போது வெளியாகி உள்ளது.
அனிருத்-காவ்யா இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வெளிநாட்டில் பயணம் செய்த வீடியோவும் கூட இணையத்தில் வைரலானது. தற்போது, அனிருத்தும் காவ்யாவும் தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
அனிருத்திற்கும் காவ்யாவிற்கும் நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் திருமணம் நடக்க இருக்கிறது. இதில் அனிருத்-காவ்யாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இத்திருமணத்தை முன்னின்று, அனிருத் குடும்பத்துடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் குடும்பமும், கலாநிதி மாறன் குடும்பத்துடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் குடும்பமும் நடத்துகின்றனர். இவர்களை தாண்டி நண்பர்களும் கிரீஸிற்கு கிளம்புகிறார்களாம்.
அனிருத்-காவ்யா திருமணத்திற்கு தனி விமானம் மூலமாக கலாநிடி மாறன், ஸ்டாலின், அனிருத் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தார் பயணம் செய்ய, நான்கு தனி விமானங்கள் புக் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விமானம், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும், கலாநிதி மாறன் கவனித்து வருகிறாராம்.
கிரீஸில் திருமணம் முடிந்த 10 நாட்கள் கழித்து, சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இதில், சன் குழுமத்தில் வேலை செய்பவர்களுக்காகவே ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தாண்டி, இந்தியா முழுவதும் உள்ள பல பெரும் புள்ளிகளுக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வர் சி.ஜாேசப் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் நேரில் சென்று கலாநிதி மாறன் திருமண அழைப்பிதழை வழங்கி இருக்கிறார். இதனால், அவர்கள் இந்த திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத்தின் வாழ்க்கை குறித்து, 14 வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஜோதிடர் லைவ் டிவியில் கணித்திருந்தார். அதில் அனிருத், கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வார் என்றும், அதிலும் அவருடைய தன்னுடைய தந்தை யாரை தேர்ந்தெடுக்கிறாரோ, அவரைத்தான் இவர் திருமணம் செய்து கொள்வார் என கூறியிருந்தார். கூடவே அந்த பெண், அனிருத்தின் வீட்டிலிருந்து 1-2 கிலோ மீட்டர் அருகில் இருக்கும் வீட்டிலேயே வசிப்பார் என்றும், சினிமா துறையை சேர்ந்தவராக இருக்க மாட்டார் எனவும் தெரிவித்திருந்தார். அந்த பெண், டெலிவிஷன்-ப்ராட்காஸ்டிங் துறையில் இருப்பார் என்றும், கண்டிப்பாக ஒரு தொழிலதிபராக இருப்பார் எனவும் தெரிவித்திருந்தார். தற்போது இத்தனை வருடங்கள் கழித்து இந்த கணிப்புகள் அனைத்தும் உண்மையாகி இருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காவ்யா மாறன், சென்னையில் பிறந்து வளர்ந்து, இங்கிலாந்தில் எம்.பி.ஏ படித்தவர். இப்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருக்கிறார். இவருக்கு மட்டும் சுமார் ரூ.409 கோடி சொத்து மதிப்பு இருக்கிறதாம். இது இல்லாமல், அவருடைய அப்பாவின் சொத்து சுமார் ரூ.24,600 கோடி வரை உள்ளது. இவை அனைத்திற்கும் ஒரே அதிபதி காவ்யா மாறன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.