• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TNSTC ஆன்மீக சுற்றுலா... 1 நாளில் 14 வைணவ கோவில்களுக்கு போகலாம்... கட்டணம் எவ்வளவு?

TNSTC ஆன்மீக சுற்றுலா... 1 நாளில் 14 வைணவ கோவில்களுக்கு போகலாம்... கட்டணம் எவ்வளவு?

Written BySudharsan G
Published: Oct 02, 2026, 03:59 PM IST|Updated: Oct 02, 2026, 04:03 PM IST
joinshare
டெல்டா மாவட்டங்களைச் சுற்றியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச திருக்கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த கோவில்களில் தரிசனம் செய்யலாம்?, எந்த நாட்களில் சுற்றுலா..? கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள வைணவ தளங்களுக்குச் சென்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஒரு நாள் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TNSTC Spiritual Tour1/5

ஒரு நாள் சுற்றுலா

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), கும்பகோணம் கோட்டம், கும்பகோணம் மண்டலம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச திருக்கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TNSTC Spiritual Tour2/5

டெல்டா மாவட்டங்கள்

கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியை சுற்றி அமைந்துள்ள 14 ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
TNSTC Spiritual Tour3/5

14 வைணவ கோவில்கள்

சீர்காழி - ஸ்ரீகாழிச்சீராம விண்ணகரம் என்னும் ஸ்ரீ தாடாளன் பெருமாள் திருக்கோயில்; திருவெள்ளக்குளம் - அண்ணன் பெருமாள் கோயில்; திருநகரி - ஸ்ரீ கல்யாண ரெங்கநாதர் திருக்கோயில்; திருமணிக்கூடம் - ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்; வைகுண்ட விண்ணகரம் - ஸ்ரீ வைகுண்ட நாதர் திருக்கோயில்; திருநாங்கூர் - ஸ்ரீ வண்புருடோத்தமன் பெருமாள் திருக்கோயில்; திருநாங்கூர் - ஸ்ரீ செம்பொன் அரங்கர் ஸ்ரீ செம்பொன்செய் திருக்கோயில்; திருத்தெற்றியம்பலம்- ஸ்ரீ பள்ளிகொண்டபெருமாள் திருக்கோயில்; அரிமேய விண்ணகரம் - ஸ்ரீ குடமாடும் கூத்தர் திருக்கோயில்; மணிமாடக்கோயில் - ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயில்; திருஇந்தளூர், மயிலாடுதுறை - திரு பரிமளரங்கநாத ஸ்வாமி திருக்கோயில்; சங்கநல்லூர் / சேங்கனூர் - ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கோயில்; நாச்சியார் திருக்கோயில் - ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் / ஸ்ரீ நறையூர் நம்பி திருக்கோயில்; திருக்குடந்தை - ஸ்ரீ சாரங்கபாணி (ஆராவமுதன்) பெருமாள் திருக்கோயில்
TNSTC Spiritual Tour4/5

முன்பதிவு முக்கியம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் இந்த சுற்றுலா தொடங்குகிறது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தும்; நேரடியாக சென்றும் பயண சீட்டு பெற இயலும். www.tnstc.in, TNSTC மொபைல் செயலி மூலமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். கும்பகோணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
TNSTC Spiritual Tour5/5

ஒரு பயணிக்கு எவ்வளவு கட்டணம்?

இந்த ஒரு நாள் சுற்றுலா புறப்படும் இடம் மற்றும் வந்து சேரும் இடம் கும்பகோணம் மத்திய பேருந்து நிலையம்தான். சுற்றுலா அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு சுற்றுலா நிறைவடையும். கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,350 மட்டும் வசூலிக்கப்படுகிறது.
TAGS:
Tour Travel

Trending

  • News
  • Photos
  • Videos
EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

2

சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

4

செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

5

Travel பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.400ல் 5 இடத்தை சுற்றி பார்க்கலாம்..யூஸ் பண்ணிக்கோங்க..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.