Today Rasi Palan November 12: இன்று (நவம்பர் 11, 2026) வியாழக்கிழமை, ஐப்பசி 26 ஆம் நாள், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்? என்னென்ன பலன்கள், எதில் கவனமாக இருக்க வேண்டும்? உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/13
மேஷம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியங்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும் நீண்ட தூர பயண சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : ஆதாயகரமான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
2/13
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். கல்விப் பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கான அங்கீகாரங்கள் காலதாமதமாகி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
கிருத்திகை : வேறுபாடுகள் நீங்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : தாமதம் உண்டாகும்.
3/13
மிதுனம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நவீன கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பலவித மக்களின் தொடர்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை : தெளிவுகள் பிறக்கும்.
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
4/13
கடகம்
சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உருவாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் மாற்றம் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : தாமதங்கள் விலகும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : மாற்றம் பிறக்கும்.
5/13
சிம்மம்
பேச்சின் மூலம் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அனுபவம் வெளிப்படும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
6/13
கன்னி
சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : வசதிகள் மேம்படும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : மேன்மையான நாள்.
7/13
துலாம்
எதிலும் விவேகத்தோடு செயல்படுவீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : விவேகத்துடன் செயல்படவும்.
சுவாதி : திருப்பங்கள் ஏற்படும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
8/13
விருச்சிகம்
மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : போட்டிகள் குறையும்.
கேட்டை : மதிப்புகள் உயரும்.
9/13
தனுசு
உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வீடு மாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் மாற்றமான தருணங்கள் உருவாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மூலம் : சோர்வுகள் நீங்கும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
10/13
மகரம்
நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : தடைகள் நீங்கும்.
11/13
கும்பம்
தனவரவில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். மறுமண முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் மற்றும் தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இணைய வர்த்தகத்தில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஏற்ற இறக்கங்கள் குறையும்.
சதயம் : லாபகரமான நாள்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
12/13
மீனம்
செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
உத்திரட்டாதி : பொறுப்புடன் செயல்படவும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.
13/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.