Today Rasi Palan: இன்று (நவம்பர் 17, 2026) செவ்வாய்க்கிழமை கார்த்திகை 01 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/13
மேஷம்
மனதளவில் இருந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைக்கூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : கவலைகள் குறையும்.
பரணி : திருப்தியான நாள்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
2/13
ரிஷபம்
சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
3/13
மிதுனம்
மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
திருவாதிரை : புரிதல் அதிகரிக்கும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
4/13
கடகம்
விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் இருப்பது நல்லது. எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். முதலீடு தொடர்பான செயல்களை தவிர்க்கவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பம் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
புனர்பூசம் : பேச்சுக்களில் கவனம்.
பூசம் : பதற்றமின்றி செயல்படவும்.
ஆயில்யம் : குழப்பம் மறையும்.
5/13
சிம்மம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்
மகம் : உற்சாகமான நாள்.
பூரம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
உத்திரம் : நம்பிக்கை பிறக்கும்.
6/13
கன்னி
வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். நெருக்கமானவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வீடு, மனை விற்பனையில் லாபம் உண்டாகும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்பாலின மக்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : இழுபறிகள் மறையும்.
அஸ்தம் : மாற்றம் ஏற்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
7/13
துலாம்
பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். சாதுரியமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : மாற்றங்கள் உருவாகும்.
விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
8/13
விருச்சிகம்
பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற பலன்கள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். சேமிப்பு விஷயங்களில் கவனம் வேண்டும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : பலன்கள் சாதகமாகும்.
அனுஷம் : தாமதங்கள் விலகும்.
கேட்டை : ஒத்துழைப்பான நாள்.
9/13
தனுசு
அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தாமதங்கள் விலகும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : துரிதம் ஏற்படும்.
10/13
மகரம்
எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் தெளிவு காணப்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
திருவோணம் : தெளிவுகள் காணப்படும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
11/13
கும்பம்
உயர்கல்வியில் கவனம் வேண்டும். உபரி வருமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். அக்கம்பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் தாமதம் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் சாதகமான சூழ்ல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
12/13
மீனம்
மனதில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எந்த ஒரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வும் ஒருவிதமான மந்த நிலையும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
ரேவதி : மந்தமான நாள்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.