• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரை! யார் யாருக்கு எப்படி?

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரை! யார் யாருக்கு எப்படி?

Written ByR Balaji
Published: Oct 26, 2026, 06:23 AM IST|Updated: Oct 26, 2026, 06:31 AM IST
joinshare

Today Rasi Palan October 26: இன்று (அக்டோபர் 26, திங்கள்கிழமை) ஐப்பசி 9ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை தவிர்க்கவும். புதிய முடிவுகளை எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படவும். பணியாட்கள் தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கையாளவும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மறதி பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் ரோஸ் நிறம் அஸ்வினி : கவனம் வேண்டும். பரணி : நிதானத்தை கையாளவும். கிருத்திகை : குழப்பங்கள் உண்டாகும்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறைமுக தடைகள் படிப்படியாக குறையும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும். ரோகிணி : கவனம் வேண்டும். மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உருவாகும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பட்டுகள் வரும். பிற இன மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை : லாபம் மேம்படும். புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
Today Rasi Palan4/13

கடகம்

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும். பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள். ஆயில்யம் : மதிப்புகள் உயரும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். நண்பர்கள் வகையில் சிறு வேறுபாடுகள் ஏற்படும். வீண் செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : சோர்வான நாள். பூரம் : குழப்பமான நாள். உத்திரம் : அனுபவங்கள் ஏற்படும்.
Today Rasi Palan6/13

கன்னி

எண்ணிய பணிகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செயல்பாடுகளில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திரம் : அனுபவம் ஏற்படும். அஸ்தம் : தடைகள் உண்டாகும். சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
Today Rasi Palan7/13

துலாம்

நீண்ட நாள் உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : புத்துணர்ச்சியான நாள். சுவாதி : சிந்தனைகள் மேம்படும். விசாகம் : ஆர்வம் பிறக்கும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் மேம்படும் மேம்படும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் விசாகம் : பிரச்சனைகள் குறையும். அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.
Today Rasi Palan9/13

தனுசு

பூர்வீக சொத்தின் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணத்தின் மூலம் வரவுகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : லாபகரமான நாள். பூராடம் : அலைச்சல் அதிகரிக்கும். உத்திராடம் : வரவுகள் மேம்படும்.
Today Rasi Palan10/13

மகரம்

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். கடன் விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கமிஷன் வகையில் ஆதாயம் ஏற்படும். பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம் உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும். திருவோணம் : மாற்றங்கள் உருவாகும். அவிட்டம் : திருப்தியான நாள்.
Today Rasi Palan11/13

கும்பம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : புரிந்து கொள்வீர்கள். சதயம் : ஒத்துழைப்பான நாள். பூரட்டாதி : ஆதரவான நாள்.
Today Rasi Palan12/13

மீனம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் விலகும். வியாபார ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். உணவு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். உத்திரட்டாதி : சிக்கல்கள் விலகும். ரேவதி : துரிதம் ஏற்படும்.
Today Rasi Palan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
TN Weather: மழைக்கு லீவ்! நவம்பர் 1 வரை வறண்ட வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

TN Weather: மழைக்கு லீவ்! நவம்பர் 1 வரை வறண்ட வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

2

School Leave: கனமழை எதிரொலி.. தமிழகத்தின் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

3

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

4

பருவமழை எதிரொலி: அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

5

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.