• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்த முக்கிய டிப்ஸ் கொடுத்துள்ள கரூர் மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் புத்தகங்கள் படிப்பதன் மூலம் தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 25, 2026, 05:55 PM IST|Updated: Oct 25, 2026, 06:00 PM IST
joinshare
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர்  கொடுத்த டிப்ஸ்
Image Credit: TNPSC Success Tips

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர்  கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

2

பாஜகவின் Operation D... தமிழக அரசியலில் புதிய நடிகர்... மாணிக்கம் தாகூர் சொல்லும் முக்கிய மேட்டர்

3

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

4

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: நேரில் மனுக்கள் வாங்கப்படாது – அரசு அதிரடி!

5

IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் வியாழக்கிழமை மாவட்ட மைய நூலக கூட்டரங்கில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தக விற்பனை மையத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக விற்பனை மையம் துவக்க விழா மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியி பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். நன்கொடையாளர்களை நான் சந்திப்பது இது முதல் முறை அல்ல. இங்க இருக்கிற மாணவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் அவர்களை முதல்முறையாக சந்திக்கலாம்.

நான் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் அவர்களை பலமுறை சந்தித்திருக்கின்றேன். அவர்களுடைய அந்த பொதுநலத்தை நான் பலமுறை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இவர்களுடைய நல் ஆதரவு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து கிடைக்கப் பெற வேண்டும் என்று இந்த நேர்விலே நான் கேட்டுக்கொள்கின்றேன். போட்டித் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நான் முதலில் சொல்ல விரும்புவது என்னை பற்றியே உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

உங்களுக்கு நான் ஒரு பெரிய முன் உதாரனம். நான் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வில் 4 முறை தோல்வியடைந்த நபர். எனது 5 வது முறை நேர்முகத் தேர்வில் மத்திய அரசின் கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் அலுவலர் பணிக்கு தேர்வானேன். அதே சமயத்தில் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு குரூப் 1பணியும் கிடைத்தது. எந்த பணியை தேர்ந்தெடுப்பது என்று நான் யோசித்த போது, தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல எனக்கு மனமில்லை, காரணம் எனது குடும்பச் சூழல் மட்டுமே. நான் மத்திய அரசின் பணியை தேர்ந்தெடுத்திருந்தால், இன்று நான் உயரிய பதவிக்கு சென்றிருப்பேன். மாநில அரசின் பதவியை தேர்ந்தெடுத்ததால் உங்கள் முன் இன்று மாவட்ட ஆட்சியராக பேசிக்கொண்டு இருக்கிறேன். நம் அனைவராலும் ஏதோ ஒரு வகையில சாதிக்க முடியும்.

மத்திய அரசின் யு.பி.எஸ்.சி நேர்முகத் தேர்விற்கு 5 முறை நான் சென்றுள்ளதால், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிழை செய்துவிடுவேன் அல்லது ஏதோ ஒரு பாடப்பிரிவில் தோல்வியடைந்து விடுவேன். நான் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வினை 2001 முதல் 2005 வருடங்களில் எழுதினேன். நான் தேர்வு எழுதிய காலத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் இல்லாததது, பெரிய ஒரு தடையாக இருந்தது. வேற வாய்ப்பே கிடையாது. போட்டித் தேர்வு எழுதணும்னா ஒரே வாய்ப்பு, மத்திய அரசின் (UPSC) தேர்வு மட்டும் தான். நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன், காவல் துறையின் தலைமை அலுவலகத்தில் உள்ள தொலை தொடர்பு பிரிவில், குரூப் 4 அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு குரூப் 2 தேர்ச்சி பெற்று நகராட்சி ஆணையரக பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் குரூப் -1 தேர்ச்சி பெற்றேன். வெற்றி - தோல்வி என்பது சாதாரனம். நான் 10 ஆண்டுகளாக கற்றுக்கொண்ட பாடங்கள் என்னை உருவாக்குவதில் நிறைய பங்காற்றியுள்ளது.

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு சிறந்த மாணவனை உருவாக்குவதில நிறைய பங்களிப்பை செலுத்துகிறார்கள். அது போல் தான் எந்த கல்வியை கற்றாலும் அதில் உயர்வோ தாழ்வோ கிடையாது. நீங்கள் படித்த கல்வி நிறுவனத்தில் எவ்வாறு கல்வி கற்றீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுடைய ஆளுமை மற்றும் நற்பண்புகள் வளரும். இங்க இருக்க கூடிய அனைவரும் மிகப்பெரிய அரசுப் பணிகளில் அலுவலர்களாக உருவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. அதற்கு தேவையான ஆசிரியர்களும்,பயிற்றுநர்களும் ஒரு சிறு கருவிதான்.

இதெல்லாம் நான் சொல்லவதற்க்கான காரணம், முடிந்த அளவுக்கு நீங்கள் புத்தகத்தை வாசியுங்கள். புத்தகத்தை படிக்கும் பொழுதுதான் உங்கள் ஆழ்மனதில பதியும். உங்க அனைத்து புலன்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டும்தான், ஒரு புத்தகத்தை தொடர்ந்து படிக்க முடியும். போட்டித் தேர்வு என்பது நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்று உங்களை சோதிப்பது கிடையாது. நீங்கள் படித்துக் கொண்டதை, நீங்கள் புரிந்து கொண்டதை எவ்வளவு சிறப்பா உங்களால திருப்பி கொடுக்க முடியும் என்பது தான்.

அதற்கு முதல் புத்தகம் படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிறதுன்றதே ஒரு பெரிய தவம் மாதிரி, அதுவே ஒரு பெரிய ஒழுக்கத்தை உங்களுக்கு கொடுக்கும். இந்த நூலகத்தில் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளது. புத்தகங்களை வாசிப்பதன் மூலம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். மத்திய மற்றும் மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகக் கூடிய வசதிகள் அனைத்தும் கரூரில் உள்ளது.

மாணவர்கள் இந்த வசதிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவருக்கம் பெரிய கனவுகள் உண்டு. நான் கரூர் மாவட்டத்தில் மட்டும் பணிபுரியல, விருதுநகர் போன்ற பல மாவட்டங்கள்ல பணிபுரிந்த பிறகுதான், இங்க வந்திருக்கிறேன். என்னுடைய ஆசை என்னவென்றால், உங்கள் அனைவரையுமே இங்க இருக்கக்கூடிய நன்கொடையாளர்கள் போல மாற்ற வேண்டும் என்பது தான்.

மாணவர்களே நீங்கள் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் ஒவ்வொருக்கும் ஒரு தனித் திறமை உள்ளது . ஒரு கதவு மூடினால், பல கதவுகள் திறக்கும். உங்களுக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுப்பதுக்கான கால அவகாசம் ஒருவருக்கொருவர் மாறுபடும் . அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். போட்டித் தேர்வு மட்டுமே தீர்வல்ல. இன்றைய பொருளாதார வளர்ச்சியில இந்தியாவும், உலக நாடுகளும் நிறைய வாய்புகளை கொடுக்கிறார்கள். அதை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆராய வேண்டும்.

அனைவரும் பொறுப்புணர்வோடு சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும். அதையும் தாண்டி நமது தேசத்தின் நலனுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் . அதுக்கு அரசு அலுவலர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இங்க இருக்கிற 20 முதல் 25 நபர்கள் அரசு அலுவலர்கள் ஆகலாம். மீதமுள்ளவர்கள் பெரிய தொழில் முனைவோர்களாலம். வாழ்க்கையில வெற்றி என்பது இந்த தேர்வோடு நின்று போகப்போவது கிடையாது. ஆனால் கடினமான உழைப்பும், தொடர்ந்து முயற்சி செய்யக்கூடிய நல்ல பழக்கமும் ஒழுக்கமும் இருந்தால், ஒரு நாள் என் போல இருக்கலாம்.

எந்த மாணவன் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் போது ஒழுங்கா வழிநடத்தப்படவில்லையோ, ஒழுக்கமாக வளர்க்கப்படவில்லையோ அந்த மாணவன்தான் 12ம் வகுப்பு வரும்போது தீய பழக்கத்திற்கு ஆளாகிறான். அடுத்த ஒரு தலைமுறையை நீங்கள் எங்கே சந்தித்தாலும், அவர்களை ஊக்குவியுங்கள். சின்ன குழந்தைகளை பார்க்கும்போது, அவங்களை பார்த்து உங்களுக்கான ஊக்கத்தையும் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களையும் நல்வழிப்படுத்துங்கள், ஊக்குவியுங்கள்.

ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமென்றால், உங்க தலைமுறையில அது 50% முடியலாம். 100% முடியும்னு நினைச்சீங்கன்னா, நீங்கள் இன்னைக்கு பார்க்கக்கூடிய அந்த 10, 12 வயதுடையவர்களுடன் நன்றாக பழகுங்கள். அவர்களை நல்வழிப்படுத்துங்கள். அந்த சமுதாயம் வந்து வளர வளரத்தான் இன்று இருக்கக்கூடிய சமுதாய சிக்கல்கள் பெருமளவுல தீர்வை நோக்கி வரும். எனவே, இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய நல்ல கருத்துக்கள் எல்லாம் இங்க சொல்லி இருக்காங்க. எது நல்லது, எது தேவையானது, எது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்னு சொல்லி நல்ல வழியை தேர்ந்தெடுங்கள்.

என்ன இருந்தாலும் சரி மகிழ்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை ஒரு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். முதல்ல மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். எல்லாருக்கும் பிரச்சனை இருக்கும், பிரச்சனை இல்லாத மனிதன் இருக்கவே மாட்டான். மகிழ்ச்சி இருந்தா வெற்றி தானாக உங்களை வந்து அடையும் என்று தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் தெரிவித்தார். முன்னதாக, மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தக விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் தொடங்கிவைத்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
TNPSC