• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

சுற்றுலாத் துறையில் தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு. தமிழக அரசின் 2 நாள் சிறப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 25, 2026, 09:58 PM IST|Updated: Oct 25, 2026, 10:00 PM IST
joinshare
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Tamilnadu government tourism training

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அரசின் சுற்றுலா, பயணப்பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

2

பருவமழை எதிரொலி: அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

3

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

4

பாஜகவின் Operation D... தமிழக அரசியலில் புதிய நடிகர்... மாணிக்கம் தாகூர் சொல்லும் முக்கிய மேட்டர்

5

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சுற்றுலா மற்றும் பயணத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்காக இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளது. இந்த நேரடிப் பயிற்சி வகுப்பு 2026 அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறுகிறது.  

பயிற்சியில் கற்பிக்கப்படும் முக்கிய அம்சங்கள்

சுற்றுலாத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான விமான டிக்கெட் முன்பதிவு நடைமுறைகள், சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த அடிப்படை வழிகாட்டல்கள், ஹோட்டல் முன்பதிவு உத்திகள், சுற்றுலா பேக்கேஜ்கள் உருவாக்குதல் மற்றும் பயணத் திட்டமிடல், விசா விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், இத்துறை சார்ந்த செய்முறைப் பயிற்சிகளும் நேரடியாக அளிக்கப்படும்.  

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்குத் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும். சுற்றுலாத் துறையில் அனுபவம் வாய்ந்த முன்னணி வல்லுநர்கள் மூலம் நேரடியாக ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, புதிய தொழில் தொடங்குவதற்குத் தேவையான மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகள், மானியத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களும் பயிற்சியின்போது வழங்கப்படும்.  

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

18 வயது பூர்த்தியடைந்த, குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்குக் குறைந்தபட்ச கணினி அறிவு இருப்பது அவசியமாகும். வெளியூர்களில் இருந்து வந்து கலந்துகொள்ளும் பயனாளிகளுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  

விண்ணப்பிக்கும் முறை

இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8668100181, 9360221280 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முகவரி: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu