Trichy news : திருச்சியில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விவரம்
Trichy news : "இரத்தசோகை இல்லாத கிராமம்" பிரச்சாரமும் பாரம்பரிய உணவுத் திருவிழா திருச்சியில் நடத்தப்பட உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
1/5
இரத்தசோகை இல்லாத கிராமம்
"இரத்தசோகை இல்லாத கிராமம்" சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் : திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோரின் நலனைப் பேண விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தசோகை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், FNHW திட்டத்தின் கீழ் "இரத்தசோகை இல்லாத கிராமம்" பிரச்சாரமும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடத்தப்படுகின்றன.
2/5
ஊராட்சிகளில் விழிப்புணர்வுப் போட்டிகள்
ஊராட்சிகளில் விழிப்புணர்வுப் போட்டிகள் : உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் மற்றும் 407 கிராம ஊராட்சிகளிலும் விரிவான அளவில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
3/5
ஊராட்சி அளவிலான போட்டிகள்
ஊராட்சி அளவிலான போட்டிகள், ரொக்கப் பரிசுகள் : கிராம ஊராட்சி அளவிலான போட்டிகள் கிராம பஞ்சாயத்து சேவை மையத்தில் (VPSC) அக்டோபர் 28, 2026 முதல் அக்டோபர் 30, 2026 வரை நடைபெற்றன. இதில் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்ற நிலையில், முதல் பரிசாக ரூ.400, இரண்டாம் பரிசாக ரூ.300 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/5
வட்டார அளவிலான போட்டிகள்
வட்டார அளவிலான போட்டிகள், ரூ.4000 வரை பரிசுகள் : வட்டார அளவிலான போட்டிகள் நவம்பர் 4 முதல் நவம்பர் 6 வரை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் / வானவில் மையத்தில் (BMMU) நடைபெறவுள்ளன. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.4,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
5/5
மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்
மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் : இப்போட்டிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.