TTDC Madurai Tour: மதுரையில் உள்ள விஷ்ணு கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நாள் சுற்றுலாவை திட்டமிட்டுள்ளது. இதில் எந்தெந்த கோவில்களுக்கு போகலாம்...? கட்டணம் எவ்வளவு என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
TTDC Madurai Vishnu Temples One Day Tour :தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பயணிகளை வெவ்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறது. அந்த வகையில், மதுரையில் உள்ள பக்தர்களை விஷ்ணு கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1/5
மதுரை விஷ்ணு கோவில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மதுரையில் ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், ஒரே நாளில் மதுரையை சுற்றியுள்ள பழமையான மற்றும் சிறப்புமிக்க விஷ்ணு கோவில்களுக்குச் சென்று நீங்கள் தரிசனம் செய்யலாம்.
2/5
மதுரை விஷ்ணு கோவில் சுற்றுலா
அழகர் கோவிலில் தொடங்கி மதுரையைச் சுற்றியுள்ள விஷ்ணு கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். காலை 8.30 மணிக்கு மதுரை ஹோட்டல் தமிழ்நாட்டில் பேருந்தில் புறப்பட்டால், அன்றிரவு 9 மணிக்கு திரும்பிவிடலாம்.
3/5
மதுரை விஷ்ணு கோவில் சுற்றுலா
காலை 8.30 மணிக்கு புறப்பட்டால், 9.30 மணிக்கு அழகர் கோவிலுக்கு சென்று கள்ளழகரை தரிசனம் மேற்கொள்ளலாம். அங்கிருந்து ஒத்தக்கடை யோக நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு காலை 11 மணிக்கு செல்லலாம். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு பகல் 11.45 மணிக்கு திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.
4/5
மதுரை விஷ்ணு கோவில் சுற்றுலா
அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மதியம் 1 மணிக்கு திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோவிலைச் சென்றடையலாம். அங்கு மதிய கோவில் அன்னதானம் இருக்கும், அங்கு உணவு அருந்தலாம். மாலை 4 மணிக்கு நடை திறந்ததும் அங்கு சாமி தரிசனம் மேற்கொண்டு, மாலை 5.30 மணிக்கு கூடலழகர் பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளலாம். அதன்பின் ஹோட்டலுக்கு திரும்பிவிடலாம்.
5/5
மதுரை விஷ்ணு கோவில் சுற்றுலா
www.ttdc.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்பதிவு மேற்கொள்ளலாம். 1800 4253 1111 என்ற டோல் ஃப்ரீ நம்பரிலும், support@ttdconline.com என்ற இணையத்தளம் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். சுற்றுலாவின் தேதிகள், உங்களின் பிற சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு ரூ.1300 வசூலிக்கப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் அவர்களின் இணையத்தளம் மூலம் எடுக்கப்பட்டதாகும்.