TTDC Thanjavur Tour : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. அந்த வகையில், இந்த சுற்றுலா திட்டத்தின் முழு விவரங்களையும் இப்புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
TTDC Thanjavur Vishnu Temples Tour : தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தஞ்சாவூர் விஷ்ணு கோவில்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்கிறது. இந்த சுற்றுலாவில் எங்கெல்லாம் செல்லலாம்? எவ்வளவு கட்டணம்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
1/5
தஞ்சாவூர் விஷ்ணு கோவில் டூர்
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விஷ்ணு கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்கிறது. அதேபோல், தஞ்சாவூரிலும் விஷ்ணு கோவில்களுக்கு ஒருநாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
2/5
தஞ்சாவூர் விஷ்ணு கோவில் டூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். காலை 8.30 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்குள் திரும்பிவிடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை, மன்னார்குடி, வடவூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லலாம். ஒரே நாளில் 170 கி.மீ., பயணித்து பெருமாளின் அருளை பெறலாம்.
3/5
தஞ்சாவூர் விஷ்ணு கோவில் டூர்
காலை 9 மணிக்கு திருக்கண்டியூர் சாபவிமோசன பெருமாள் கோவிலுக்கு போகலாம். காலை 11.30 மணிக்கு கும்பகோணம் சாரங்கப்பாணி பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். மதியம் 12.30 மணிக்கு திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்புலியப்பப்பெருமாள் கோவிலுக்குச் செல்லலாம். பிற்பகல் 1 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை உப்புலியப்பப்பெருமாள் கோவிலின் அன்னாதனத்தில் மதிய உணவை சாப்பிடலாம்.
4/5
தஞ்சாவூர் விஷ்ணு கோவில் டூர்
மாலை 4.30 மணிக்கு நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கு போகலாம். மாலை 5.15 மணிக்கு திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவிலுக்கு போகலாம். மதியம் 6.45 மணிக்கு மன்னார்குடி ராஜகோபால் சுவாமி பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். இறுதியாக வடுவூர் கோதண்டராம பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். மதியம் 9 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் ஹோட்டல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடலாம்.
5/5
தஞ்சாவூர் விஷ்ணு கோவில் டூர்
கூடுதல் தகவல்களை அறிய 1800 4253 1111 என்ற நம்பரிலும், support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்கலாம். தஞ்சாவூர் விஷ்ணு கோவில்களுக்கான ஒருநாள் சுற்றுலாவின் கட்டணம் ரூ.1300 ஆகும்.