• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /UCO வங்கியில் வேலை வாய்ப்பு! 530 காலியிடங்கள்-Any Degree..உடனே அப்ளை பண்ணுங்க..

UCO வங்கியில் வேலை வாய்ப்பு! 530 காலியிடங்கள்-Any Degree..உடனே அப்ளை பண்ணுங்க..

Written ByYuvashree M
Published: Oct 14, 2026, 04:14 PM IST|Updated: Oct 14, 2026, 04:25 PM IST
joinshare
UCO வங்கியில், 530 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; இதில், யார்-எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

UCO வங்கியில் 530 apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதனை, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

UCO Bank1/5

யுகோ வங்கி

யுகோ வங்கியில், 530 apprentice காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகையும் மாதா மாதம் வழங்கப்படும்.
Important Dates2/5

முக்கிய தேதிகள்

இந்த யூகோ வங்கியின் Apprentice வேலைக்கு விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் தேதி 14.10.2026 ஆக இருக்கிறது. முடியும் தேதி, 29.10.2026ஆக இருக்கிறது. சம்பளம் அதாவது உதவித்தொகை மாதம் ரூ.16,650ஆக இருக்கிறது. காலிப்பணியிடங்கள் மொத்தம் 530 ஆகும்.
Educational Qualification3/5

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனங்களில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு. விண்ணப்பதாரர்கள் 01.04.2022 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்து, பல்கலைக்கழகம்/நிறுவனம்/கல்லூரியிலிருந்து தங்களது பட்டப்படிப்பிற்காக வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தற்காலிக/இறுதிப் பட்டச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். வயது தகுதி : 20 முதல் 28 வயது வரை இருப்பவராக இருக்க வேண்டும்.
Age relaxations4/5

வயது தளர்வுகள்

SC/ST : 5 ஆண்டுகள், OBC - 3 ஆண்டுகள், PwBD (Gen/EWS)-10 ஆண்டுகள் PwBD (SC/ST)-15 ஆண்டுகள் PwBD (OBC)-13 ஆண்டுகள், விண்ணப்பக்கட்டணம் : SC/ST - ரூ.200, ஜெனரல் OBC, EWS, Male - ரூ.800, General, OBC, EWS - Female, Transgender - ரூ.600 தேர்வு செய்யும் முறை : ஆன்லைன் தேர்வு பின்பு நேர்காணல்
How To apply5/5

எப்படி விண்ணப்பிப்பது?

முதலில், NATS இணையதளத்திற்குச் சென்று மாணவர் பதிவை மேற்கொள்ளவும். உள்நுழைந்து, 'UCO Bank Apprentice 2026' அறிவிப்பைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கவும். உருவாக்கப்படும் பதிவு எண்ணை (Enrolment ID) குறித்து வைத்துக்கொள்ளவும். கூடுதல் விவரங்களை வழங்கவும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும், BFSI SSC அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். 29.10.2026-க்குள் விண்ணப்பப் பூர்த்தி செய்யும் செயல்முறையை நிறைவு செய்யவும்.
TAGS:
Velai Vaippu

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்

2

PF தொகையை எடுக்கணுமா? எவ்வளவு எடுக்க முடியும்? EPFO அளித்த முக்கிய விளக்கம் இதோ

3

மம்தா பானர்ஜியை கொல்ல சதி? கத்தியால் குத்த முயன்ற பெண் கைது.. என்ன நடந்தது?

4

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. Kwala Intel இந்தியாவில் அறிமுகம்! ரூ.199-ல் AI வசதி

5

பிக்பாஸ் 10 : ஜேசன் - சாந்தினி ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது ஏன்? இதுதான் மேட்டர்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.