• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /செலவே இல்லை.. குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அப்டேட் செய்யலாம்.. UIDAI அதிரடி அறிவிப்பு

செலவே இல்லை.. குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அப்டேட் செய்யலாம்.. UIDAI அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 23, 2026, 16:02 IST|Updated: Nov 23, 2026, 16:59 IST
joinshare
Aadhar Free Biometric Update: குழந்தைகளுக்கான ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்ய சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் புதுப்பிப்பை வரும் 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aadhaar Free Biometric Update: இந்திய தனித்துவ அடையாளம் ஆணையத்தின்படி, ஐந்து வயது நிறைவடையும்போதும், 15 வயது நிறைவடையும்போதும் குழந்தைகளின் பயமற்று விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

Aadhaar Free Biometric Update1/5

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்

இந்திய மக்களின் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. அரசு திட்டங்கள் முதல் குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது வரை பல சேவைகளுக்கு ஆதார் கார்டு பிரதான ஆவணமாக இருந்து வருகிறது. UIDAI எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டை நிர்வகித்து வருகிறது. ஆதார் கார்டை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிப்பது அவசியம். இது குழந்தைகளின் ஆதார் கார்டுக்கும் பொருந்தும்.
Aadhaar Free Biometric Update2/5

2027 செப்டம்பர் 30 வரை இலவசமாக அப்டேட் செய்யலாம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி, குழந்தைகளுக்கான ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக இரண்டு முறை பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்வது கட்டாயமாகும். அதாவது ஐந்து வயது நிறைவடையும் போதும், 15 வயது நிறைவடையும் போதும் பயோமெட்ரிக் புதுப்பிப்பது கட்டாயமாகும். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல முக்கிய பணிகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
Aadhaar Free Biometric Update3/5

7 முதல் 15 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்

இந்த நிலையில் தான், இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் இலவசமாக குழந்தைகளுக்கு 2027 செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயோமெட்ரிக் அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதன்படி, 7 முதல் 15 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை செப்டம்பர் 30, 2027 வரை இலவசமாக செய்து கொள்ளலாம்.
Aadhaar Free Biometric Update4/5

பொதுவாக பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கு ரூ.125 வசூல்

பொதுவாக ஏழு முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு விளக்கின் காரணமாக தற்போது இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்யவில்லை என்றால் பெற்றோர்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு சென்று அந்தப் பணிகளை செய்து முடிக்கலாம். இதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
Aadhaar Free Biometric Update5/5

பயோமெட்ரிக் அப்டேட் செய்வது எப்படி?

அதே நேரத்தில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டியது அவசியம். பயோமெட்ரிக் அப்டேட் மட்டுமே இலவசமாக 2027 செப்டம்பர் வரை செய்து கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது
TAGS:
Aadhaar Card

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

2

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

3

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

4

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

5

AI Courses: ஐஐடி பாட்னாவுடன் கைகோர்த்த டெக்கடமி.. AI, Data Science படிக்க சூப்பர் வாய்ப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.