• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சுக்கிரன் பெயர்ச்சி: நவம்பர் 22 முதல் கோடீஸ்வர யோகம்.. 4 ராசிகள் மீது பண மழை

சுக்கிரன் பெயர்ச்சி: நவம்பர் 22 முதல் கோடீஸ்வர யோகம்.. 4 ராசிகள் மீது பண மழை

Written BySripriya Sambathkumar
Published: Nov 19, 2026, 14:26 IST|Updated: Nov 19, 2026, 14:34 IST
joinshare
Sukran Peyarchi Palangal: இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் 4 ராசிகள் அற்புதமான நற்பலன்களை பெறுவார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள்?

Venus Transit: நவம்பர் 22 அன்று, சுக்கிரன் கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் ராசி சுக்கிரனுக்குச் சொந்த வீடாக இருப்பதால், இதில் சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளையும் ஒரே மாதிரியாகப் பாதிப்பதில்லை. துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் அற்புதமான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

Sukran Peyarchi1/8

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் காதல், திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் நவம்பர் 22 அன்று, தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
Sukran Peyarchi Palangal2/8

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். சுக்கிரன் அருளால் இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வசதிகள் அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Aries3/8

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரும்பிய வாழ்க்கைத்துணை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாற்றம் உங்கள் தொழில் வாழ்க்கையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Cancer4/8

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களை அளிக்கும். இந்த பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் தாயுடனான உறவை வலுப்படுத்துவதுடன், குடும்பத்திற்குள் அன்பையும் இணக்கத்தையும் வளர்க்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். பண வரவு அதிகமாகும்.
Libra5/8

துலாம்

துலாம் ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் ஆளுமையை மேம்படுத்தி, சிறந்த வாழ்க்கை முறையை அனுபவிக்க வழிவகுக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத விதமாக நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படலாம், அவை நீண்ட கால அடிப்படையில் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும். படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் அல்லது ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இந்தக் காலம் மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.
Aquarius6/8

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு சுக்கிரன் மிகவும் மங்களகரமான (யோககாரக) கிரகமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் துலாம் ராசிக்குள் பிரவேசிக்கும்போது, ​​நற்பேறுக்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம். உங்கள் தந்தை மற்றும் வழிகாட்டிகளின் ஆதரவும் ஆசிகளும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து புனித யாத்திரை செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படலாம். உங்கள் வீட்டில் ஆன்மீக சடங்குகள் அல்லது நிகழ்வுகளோ சுப நிகழ்வுகளோ நடைபெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குடும்ப வாழ்க்கை இணக்கமாக இருக்கும்.
Sukran Peyarchi Palangal7/8

சுக்கிரன் காயத்ரி மந்திரம்

வாழ்வில் செல்வம் அதிகரித்து, சுகபோகங்கள் பெருக, 'ஓம் அச்வத்வஜாய வித்மஹே, தநுர் ஹஸ்தாய தீமஹி, தந்நோ சுக்ர ப்ரசோதயாத்' என்ற சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.