Vettri Magalir Goat Scheme: வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.109.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Vettri Magalir Goat Scheme: வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 30,000 பெண்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆடுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
1/5
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்
தமிழக அரசு பல தரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டப்பேரவையில் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் குறித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2/5
ஆடு வளர்ப்புத் திட்டத்தித்தின் முக்கியத்துவம்
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, நிதி. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.
3/5
30,000 பெண்களுக்கு ஆடுகள்
நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று அறிவித்தார்.
4/5
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
5/5
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தின் மூலம், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள். திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கால்நடைச் சொத்துகள் வழங்கப்படுவதால் அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு. கிராமப்புற பொருளாதாரமும் சிறக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.