சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்திற்கு முதல் நாளில் வந்திருக்கும் வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா-மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடித்திருக்கும் இந்த படத்திற்கு எவ்வளவு வசூல் கிடைத்திருக்கிறது தெரியுமா? இதோ விவரம்.
1/5
வெங்கி அட்லூரி
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இவர் ஏற்கனவே வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது சூர்யாவை வைத்து வித்தியாசமான கதையை எடுத்திருக்கிறார்.
2/5
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமித பைஜு நடித்திருக்கிறார். இதில், 40களில் இருக்கும் ஒரு ஆணுக்கும், 20களில் இருக்கும் பெண்ணிற்கும் மலரும் காதல்தான் கதைக்களம்.
3/5
ரிலீஸ்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
4/5
வசூல்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், உலகளவில் சுமார் ரூ.46.5 கோடி அளவில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5/5
ஓடிடி
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே, தியேட்டர் ரிலீஸிற்கு சில நாட்களுக்கு பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.