சூர்யா ஹீரோவாக நடிக்க, சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படம், ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா? இதோ அது குறித்த விவரம்..
சூர்யா-மமிதா பைஜூ சேர்ந்து நடித்திருந்த திரைப்படம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த திரைப்படத்தில் ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து, இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், இந்த மாதம் 14ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானது. இதில் சூர்யாவுடம் மமிதா பைஜுவும் நடித்திருந்தார்.
2/5
சூர்யா
40களில் இருக்கும் ஆண் மீது 20களில் இருக்கும் பெண்ணிற்கு காதல் வருவதுதான் படத்தின் கதை. இந்த காதல் சேர்ந்ததா இல்லையா என்பதற்கு க்ளைமேக்ஸில் விடை வைப்பது போல் வைத்து, பதிலை முடிவு செய்துகொள்ள ஆடியன்ஸிடமே விட்டு விடுகின்றனர்.
3/5
கருப்பு
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், இந்த வருடத்தில் சூர்யாவிற்கு இரண்டாவது வெற்றியை கொடுத்த படமாகும். ஏற்கனவே இதற்கு முன்னர் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் மூலமாகவும் சூர்யா வெற்றிக்கனியை சுவைத்திருக்கிறார்.
4/5
ஓடிடி
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல இப்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.
5/5
நெட்ஃப்ளிக்ஸ்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.