• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மாசம் மாசம் கேரண்டி பணம்.. சீனியர் சிட்டிசன்கள் தவறவிடக்கூடாத 5 சிறந்த அரசு திட்டங்கள்!

மாசம் மாசம் கேரண்டி பணம்.. சீனியர் சிட்டிசன்கள் தவறவிடக்கூடாத 5 சிறந்த அரசு திட்டங்கள்!

Written ByShiva Murugesan
Published: Nov 17, 2026, 12:57 IST|Updated: Nov 17, 2026, 13:06 IST
joinshare
Best Senior Citizen Investment Plans 2026: ரிட்டையர்மென்ட் பிறகு சேமித்து வைத்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து ? Senior Citizen Savings Scheme (SCSS), Post Office Monthly Income Scheme (POMIS), Senior Citizen FD, SBI Annuity Deposit v Mutual Fund SWP உள்ளிட்ட சீனியர் சிட்டிசன்களுக்கான 5 சிறந்த முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதம், முதலீட்டு வரம்பு, கால அவகாசம் மற்றும் வருமான வாய்ப்புகளை இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

Senior Citizen Investment Plans 2026: ஓய்வூதிய வாழ்க்கையில் நிதி சுதந்திரத்தை உறுதி செய்யும் 5 முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை இந்த கட்டுரை விளக்குகிறது. அரசின் பாதுகாப்புடன் SCSS மற்றும் POMIS, நிலையான வருமானத்திற்கான Bank FD மற்றும் SBI Annuity Deposit, அதிக வளர்ச்சி வாய்ப்புக்கான Mutual Fund SWP ஆகிய திட்டங்களின் சிறப்பம்சங்கள், வருமான கணக்கீடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Do you want a peaceful life after retirement1/8

ஓய்வுக்குப் பிறகும் நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?

பலர் ஓய்வூதியம் பெற்ற பிறகு மனதில் வைத்திருக்கும் மிகப்பெரிய ஆசை என்னவென்றால், மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாகவும், பண நெருக்கடி இல்லாமலும் கழிப்பதுதான். பல ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து, அதிலிருந்து மாதந்தோறும் வருமானம் பெற வேண்டும் என்பதுதான் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் அரசின் பாதுகாப்பு ஆதரவுடன் அல்லது குறைந்த ஆபத்துடன் சிறந்த வருமானம் தரக்கூடிய 5 முதலீட்டு திட்டங்களைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
Senior Citizen Savings Scheme (SCSS)2/8

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): அரசின் பாதுகாப்புடன் அதிக வட்டி

சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்று Senior Citizen Savings Scheme (SCSS). இது மத்திய அரசால் ஆதரிக்கப்படும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ₹1,000 முதலீடு செய்யலாம். தனிநபர் கணக்கில் 30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது. தற்போது இந்த திட்டம் ஆண்டுக்கு 8.2% வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். உதாரணமாக, 30 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு சுமார் ₹2.46 லட்சம் வரை வட்டி வருமானம் கிடைக்கும். மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ₹1.5 லட்சம் வரை வரிவிலக்கும் பெற முடியும்.
Post Office Monthly Income Scheme (POMIS)3/8

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS): மாதம் மாதம் கேரண்டி வருமானம்

ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர வருமானம் கிடைக்க வேண்டுமெனில் Post Office Monthly Income Scheme சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் தனிநபர் அதிகபட்சமாக 39 லட்சமும், கூட்டு கணக்கில் ₹15 லட்சமும் முதலீடு செய்யலாம். தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு சுமார் ₹9,250 வருமானம் கிடைக்கும். முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். அவசரத் தேவைக்கு முன்கூட்டியே பணத்தை எடுக்க வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அபராதக் கட்டணங்கள் பொருந்தும்.
Senior Citizen Fixed Deposit4/8

மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை: வங்கிகளில் கூடுதல் வட்டி வாய்ப்பு

சாதாரண வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் கூடுதல் வட்டியை வழங்குகின்றன. பொதுவாக 0.50% முதல் 0.75% வரை கூடுதல் வட்டி கிடைக்கலாம். பல்வேறு வங்கிகளில் 7% முதல் 7.75% வரை வட்டி கிடைக்கிறது. சில Small Finance Bank-களில் 8% மேற்பட்ட வட்டியும் வழங்கப்படுகிறது. 1 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு கால அளவுகளில் FD தொடங்க முடியும். மேலும், DICGC பாதுகாப்பின் கீழ் ஒரு வங்கியில் வைத்துள்ள ₹5 லட்சம் வரை வைப்பு தொகைக்கு காப்புறுதிப் பாதுகாப்பும் கிடைக்கிறது.
SBI Annuity Deposit Scheme5/8

எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டம்: ஓய்வூதியம் போல மாதந்தோறும் பணம்

ஒரே தொகையை முதலீடு செய்து, அதை மாதந்தோறும் வருமானமாக பெற விரும்புபவர்களுக்கு SBI Annuity Deposit Scheme ஏற்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் அசல் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து மாதாந்திர தவணைகளாக திருப்பி வழங்குவார்கள். மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை கால அவகாசம் தேர்வு செய்ய முடியும். வட்டி விகிதம் சுமார் 7.05% முதல் 7.50% வரை இருக்கும். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு மாதம்தோறும் நிலையான வருமானத்தை உருவாக்கும் சிறந்த மாற்றுத் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
Mutual Fund SWP6/8

மியூச்சுவல் ஃபண்ட் SWP: அதிக வருமானம் எதிர்பார்ப்போருக்கான ஆப்ஷன்

பணவீக்கத்தை சமாளித்து நீண்ட காலத்தில் அதிக வருமானம் பெற விரும்புவோர் Systematic Withdrawal Plan (SWP) கொண்ட Mutual Fund திட்டங்களை பரிசீலிக்கலாம். இந்த திட்டத்தில் முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. ₹5,000 போன்ற சிறிய தொகையிலிருந்தே தொடங்கலாம். நீண்ட கால அடிப்படையில் ஆண்டிற்கு 8% முதல் 11% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ₹10 லட்சம் முதலீடு செய்து 6% வருமானம் கிடைத்தாலும் மாதத்திற்கு சுமார் *5,000 வரை பெற முடியும்.
Something you must not forget when planning for retirement7/8

ரிட்டையர்மென்ட் திட்டமிடும்போது மறக்கக்கூடாத விஷயம்

முதலீடு செய்வது மட்டும் போதாது. குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பிற்காக Health Insurance மற்றும் Term Insurance ஆகியவற்றையும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு நல்ல மருத்துவ காப்பீடு மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும்.
Earn Money After Retirement8/8

ரிட்டையர்மென்ட் ஆன பிறகும் பணம் சம்பாதிக்கலாம்

ரிட்டையர்மென்ட் வாழ்க்கை என்பது சம்பாதிப்பதை நிறுத்தும் காலம் அல்ல. சரியான திட்டமிடலுடன் சேமித்த பணத்தை முதலீடு செய்தால், மாதந்தோறும் நிலையான வருமானத்தையும் மனநிம்மதியையும் பெற முடியும். அரசின் பாதுகாப்பு விரும்புபவர்கள் SCSS மற்றும் POMIS திட்டங்களை தேர்வு செய்யலாம். வங்கி வைப்புகளை விரும்புபவர்கள் Senior Citizen FD-ஐ தேர்வு செய்யலாம். மாதாந்திர ஓய்வூதியம் போன்ற வருமானம் தேவைப்படுவோருக்கு SBI Annuity Deposit சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் பணவீக்கத்தை வென்று அதிக வருமானம் தேடும் முதலீட்டாளர்கள் Mutual Fund SWP திட்டங்களை பரிசீலிக்கலாம்.
TAGS:
Govt Schemes

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.