Actress Leena Chandavarkar : பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்து, திருமணமான 11வது நாளிலேயே கணவரை இழந்த நடிகை லீனாவின் வாழ்க்க பின்னணி குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Actress Leena Chandavarkar : கோவா முதல்வர் மகனை மணந்த 11 நாளில் கணவரை இழந்த பாலிவுட் நடிகை லீனா சந்தவார்கரின் சோகம் நிறைந்த உண்மை வாழ்க்கைக் கதைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்
1/7
1. திரையுலகில் மின்னிய நட்சத்திரம்!
கர்நாடகாவில் ஒரு ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகை லீனா சந்தவார்கர். கடந்த 1968-ம் ஆண்டு வெளியான ‘மா கா மீத்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். வினோத் கண்ணா கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.
2/7
2. ஒரே இரவில் உச்சம் தொட்ட நடிகை!
முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராஜேஷ் கண்ணா மற்றும் திலீப் குமார் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்புகள் லீனாவிற்கு வந்தன. 70 மற்றும் 80-களில் பாலிவுட்டின் தவிர்க்க முடியாத கனவுக்கன்னியாக வலம் வந்து புகழின் உச்சத்தைத் தொட்டார்.
3/7
3. முதல்வர் மகனுடன் மலர்ந்த காதல்!
சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய சமயத்தில், லீனாவிற்கு சித்தார்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சித்தார்த் கோவாவின் முதல் முதலமைச்சரான பந்தோட்கரின் மகன் ஆவார். இருவருக்கும் இடையே காதல் மலர, தனது 24-வது வயதில் முதலமைச்சரின் மகனை ஆடம்பரமாகக் கரம்பிடித்தார் லீனா.
4/7
4. 11-வது நாளில் நடந்த எதிர்பாராத பேரதிர்ச்சி!
திருமணத்திற்குப் பிறகு பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய லீனாவிற்கு 11 நாட்களிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. கணவர் சித்தார்த் தனது துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அது வெடித்ததில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
5/7
5. சமூகத்தின் வசவுகளும் லீனாவின் மீட்சியும்!
திருமணமான 11 நாட்களில் கணவரை இழந்த லீனா, கணவர் வீட்டை விட்டு வெளியேறித் தாய் வீட்டிற்குத் திரும்பினார். ஆனால், சமூகமும் சுற்றியிருந்தவர்களும் அவரை 'ராசியில்லாதவர்' என்று கூறி வசவுகளால் வாட்டினர். அந்தச் சோகங்களைத் தாங்கிக் கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
6/7
6. இரண்டாவது திருமணமும் குடும்பத்தின் எதிர்ப்பும்!
கணவரின் மறைவிற்குப் பிறகு அவர் நடித்த 'பைராக்' படம் தோல்வியடைந்த நிலையில், பிரபல பாடகரும் நடிகருமான கிஷோர் குமாருடன் நட்பு ஏற்பட்டது. லீனாவை விட 20 வயது மூத்தவராகவும், ஏற்கனவே மூன்று முறை விவாகரத்து பெற்றவராகவும் இருந்ததால், இவர்களது திருமணத்திற்கு லீனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
7/7
7. எதிர்ப்புகளை மீறி அமைந்த புதிய வாழ்க்கை!
குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, லீனா சந்தவார்கர் நடிகர் கிஷோர் குமாரை திருமணம் செய்துகொண்டு தனது புதிய வாழ்க்கையைத் தொடர்ந்தார். திரையுலகில் பிரம்மாண்ட வெற்றிகளைக் கண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சோதனைகளைக் கடந்த இந்த பிரபல நடிகைக்கு தற்போது 74 வயதாகிறது.