Pini Village: இந்தியாவில் ஒரு கிராமத்தில் மட்டுமே பெண்கள் ஆடையின்று 5 நாட்கள் இருக்க வேண்டுமாம். இந்த கிராமத்தில் பெண்கள் வினோத நடைமுறையை கடைபிடிப்பார்களாம். எனவே, இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Pini Village: பெண்கள் ஆண்டுக்கு 5 நாட்கள் ஆடையின்றி இருப்பார்களாம். இந்த 5 நாட்களில் கணவரை கூட சந்திக்க மாட்டடார்களாம்.
1/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
ஹிமாச்சல பிரசேத மாநிலம் குலு மாவட்டத்தில் அமைந்துள்ள பினி என்ற கிராமத்தில் பெண்கள் 5 நாட்கள் ஆடையின்றி இருக்கிறார்களாம். இந்த கிராமத்தில் 5 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் பெண்கள் ஆடை அணிவது கிடையாதாம். இந்த திருவிழா நாட்களில் பெண்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருப்பார்களாம். பெண்கள் தங்கள் கணவர்களைக் கூட சந்திப்பது கிடையாதாம்.
2/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
இந்த ஐந்து நாட்களிலும் ஆண்களும் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐந்து நாட்களிலும் ஆண்களும் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டுமாம். இந்த திருவிழா ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் போது, பெண்கள் சிரிக்கவோ பேசவோ கூடாதாம்.
3/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
அதே சமயத்தில் ஆண்கள் மது அருந்தவோ, அசைவ உணவு சாப்பிடவோ அனுமதியில்லை. இந்த வழக்கங்களை மீறுவது கிராமத்திற்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்து, தங்கள் வாழ்வில் சிக்கல்களை உருவாக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள் தற்போது பல பெண்கள் ஆடையில்லாமல் இருப்பதற்கு பதிலாக பருத்தி அல்லது மெல்லிய ஆடைகளை அணிவதன் மூலம் அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள்.
4/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
இதற்கான காரணத்தை பொறுத்தவரை, இந்தப் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம். பழங்காலத்தில், அசுரர்கள் கிராமத்தைத் தாக்கி அதன் பெண்களைத் துன்புறுத்தி வந்ததாக கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களின் கொடுமை அதிகரித்ததால் ஆவணி மாதத்தின் முதல் நாளில் 'லஹ்கு கோண்ட்' என்ற தெய்வம் தோன்றி, அசுரர்களைத் தோற்கடித்து கிராமத்து பெண்களை பாதுகாத்ததாக நம்புகின்றனர்.
5/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
இதனால், இந்த தெய்வதிற்கு வழிபடும் வகையில், 5 நாட்கள் திருவிழாவை கொண்டாடுகின்றனர். 5 நாட்களில் பெண்கள் ஆடை அணிந்தால், அரக்கர்கள் மீண்டும் திரும்பி வந்து கிராமத்தைத் தாக்கக்கூடும் என நம்புகின்றனர். இதனால், ஆடையின்றி பெண்கள் இந்த திருவிழா கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6/6
பினி கிராமம் (இமாச்சல பிரதேசம்)
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் பாரம்பரியம்படி சில விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஒரு கிராமத்தில் பெண்கள் ஆடையின்றி இருக்க வேண்டுமாம். இந்த நவீன காலத்தில் இந்த வினோத நடைமுறையை பெண்கள் கடைபிடித்து வருகிறார்களாம்.