SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஹரிஷ் மரண வழக்கு: பிரபல யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - பின்னணி என்ன?

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் மரண வழக்கில் பிரபல யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் இன்று (அக். 22) புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Written By Sudharsan G
Published: Oct 22, 2026, 10:28 AM IST | Updated: Oct 22, 2026, 10:32 AM IST
Join

இன்ஸ்டாகிராமில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் பிரபலமாக (Finance Influencer) அறியப்பட்டவர் ஹரிஷ். 27 வயதான இவர் நேற்று முன்தினம் (அக். 20) முட்டுக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

ஹரிஷ் எடுத்த தவறான முடிவு

புதுச்சேரியை சேர்ந்த ஹரிஷ் Finance with Harish என பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்துள்ளனர். இந்த பக்கம் முடக்கப்பட்டதால் ஏற்கெனவே ஹரிஷ் மன உளச்சலில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

இந்தச் சூழலில், வேண்டுமென்றே அவரை குறிவைத்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாகவும், இணையவழி துன்புறுத்தல் காரணமாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிஷின் தந்தை புகார்

ஹரிஷ் உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை விநாயகம் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த அக்டோபர் 18ஆம் தேதி யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் என்பவர், தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூ-ட்யூப் பக்கங்களில் ஹரிஷ் மீது ஆதாரமற்ற மோசடிக் குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது சமூக வலைதளச் செல்வாக்கைப் பயன்படுத்தி ஹரிஷுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பி, அவரைப் பொதுவெளியில் அவமானப்படுத்தி சைபர் புல்லியிங் செய்துள்ளார் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜேசன் சாமுவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜேசன் சாமுவேலின் சமூக வலைதளப் பதிவுகள், வீடியோக்கள் மற்றும் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு மெட்டா  நிறுவனத்தால் முடக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகாரில் ஹரிஷின் தந்தை வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் படிக்க | அதிகாலையில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்... தண்டவாளத்தில் நிலச்சரிவால் பாதிப்பு

ஜேசன் சாமுவேல் கைது

இந்நிலையில், ஹரிஷ் மரண வழக்கில் யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேக மரணம் வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் மாற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேலை போலீசார் புதுச்சேரியில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டாலும் அவர்தான் ஹரிஷின் தவறான முடிவுக்கு காரணமா?, ஜேசன் சாமுவேல் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பினாரா என்பதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஜேசன் சாமுவேல் உள்பட யார் மீதும் இன்னும் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. விசாரணையின் முடிவிலேயே ஹரிஷின் முடிவுக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என தெரிகிறது.

ஹரிஷின் கடைசி வீடியோ

முன்னதாக, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஹரிஷ் பேசியிருந்த வீடியோவும் வைரலாகி வந்தது. அரைமணி நேரத்திற்கும் மேலான அந்த வீடியோவில், தனது தற்கொலைக்குக் காரணம் ஜேசன் சாமுவேல் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜேசன் சாமுவேல் தன்னிடம் 3 கோடி ரூபாய் பணம் கேட்டதாகவும், பணம் தராவிட்டால் சமூக வலைதளக் கணக்குகளை முடக்கிவிடுவேன் என்றும், புதிதாக கணக்கு தொடங்கினாலும் முடக்குவேன் என்றும் மிரட்டியதாகவும் தெரிவித்தார். புதுச்சேரியில் முதலமைச்சர், எம்எல்ஏக்களை தெரியும் என்று கூறி, பெற்றோரைத் தூக்கி விடுவேன என மிரட்டல் விடுத்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | ஈரோட்டில் நர்ஸ் கொல்லப்பட்டது எப்படி? நகைக்காக சக ஊழியர் செய்த கொடூரம்.. விசாரணையில் பகீர்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES