SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராஜராஜ சோழன் கெட்டப்பில் அமைச்சர் நமச்சிவாயம்: புதுவையில் போஸ்டர் மோதலால் பரபரப்பு!

புதுவையில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளைத் தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயத்தை ராஜராஜ சோழன் தோற்றத்தில் சித்தரித்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written By Shiva Murugesan
Published: Aug 12, 2026, 04:05 PM IST | Updated: Aug 12, 2026, 04:26 PM IST
Join

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் நகர மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளின் போது, அவரைச் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பலவித கெட்டப்புகளில் சித்தரித்துப் போஸ்டர்கள் வைப்பது என்.ஆர்.காங்கிரசாரின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு அவருக்குப் பல்வேறு தோற்றங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை வைத்துள்ளனர்.

குறிப்பாக, புதுவை நகரப் பகுதிகளில் அமைச்சர் நமச்சிவாயத்தை 'ராஜராஜ சோழன்' கெட்டப்பில் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது புதுச்சேரி அரசியலிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES