SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலை வழக்கு..குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு!

புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கப்பட்டிருந்த நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 01, 2026, 03:22 PM IST | Updated: Oct 01, 2026, 03:55 PM IST
Join

2024ல், புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்வலைகளை நமக்குள் ஏற்படுத்திய ஒன்றாகும். இதில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அது குறைத்து ஆயுள் தண்டனையாக மாறி இருக்கிறது.

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அக்குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது மாயமானது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், 2 நாட்களுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமி கை,கால்கள் கட்டப்பட்டு அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமி, பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், புதுச்சேரியை பெரும் போராட்டக்களமாக மாறியது. இதனால், முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறுமியின் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

சிறுமியின் உடற்கூராய்வு நடைப்பெற்ற ஜிப்மர் மருத்துவமனை தொடங்கி, புதுச்சேரி முழுவதும் வணிகர்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளை அடைத்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப்புற பகுதிகளிலும் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு வீதிகளில் இறங்கி போராடினர்.

மேலும் படிக்க | பாலியல் துன்புறுத்தல் புகாரில் எஸ்பி சஸ்பெண்ட்! உயர் நீதிமன்ற கண்டனத்திற்கு பின் புதுச்சேரி அரசு நடவடிக்கை

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை:

சிறுமியின் இந்த கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் எனும் முதியவரும், கருணாஸ் எனும் இளைஞரும், கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, கஞ்சா மற்றும் மது போதையில் அவர்கள் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, குற்றவாளிகளில் ஒருவரான விவேகானந்தன், சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதையடுத்து அவரை போக்சோ நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. கருனாஸ் மீதான வழக்கை விசாரணை செய்தது.

கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்டனை குறைப்பு!

தன்னுடைய தூக்கு தண்டனையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கருணாஸ் மேல் முறையீடு செய்தார். அவரது மனுவை, உயர் நீத்மன்ற நீதிபதிக்ள் அனுதா சுமந்த், சுந்தர் அமர்வு விசாரணை செய்தது. இதையடுத்து, இவ்வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதிகள் பேசிய போது, கருணாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை குற்றச்சாட்டு எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

போக்சோ சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை, இதனால் கருணாஸ் அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் படிக்க | தமிழகம், புதுச்சேரி: வரிமான வரித்துறையில் வேலை, 146 காலியிடங்கள்.... யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES