• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

Shani Peyarchi: 2027ஆம் ஆண்டில் நடக்கும் சனியின் பெயர்ச்சியால் சில ராசிகள் ஏழரை சனியில் இருந்து விடுதலை பெறுவார்கள். எனவே, அவை எந்தெந்த ராசிகளுக்கு சனியின் முழு அருள் 2027ல் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 23, 2026, 08:21 IST|Updated: Nov 23, 2026, 08:35 IST
joinshare
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shani Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமகாக சனி பகவான் அறியப்படுகிறார். நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனி பகவான் 12 ராசிகளுக்கும் சுப பலன்கள் மற்றும் அசுப பலன்களை கொடுக்கிறார்.  சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2027ஆம்  ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் சனியின் பெயர்ச்சி குறித்து பார்ப்போம்.

2027ல் சனி பெயர்ச்சிகள்

ஜோதிடத்தின்படி, சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரே ராசியில் நிலைத்திருக்கும். எனவே, அதன் ராசி மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு ராசிகளைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. 2027ஆம் ஆணடில் சனி பகவான் ஜூன் 3ஆம் தேதி மீன ராசசியில் இருந்து வெளியேறி மேஷ ராசியில் பெயர்ச்சி அடைகிறார். தொடர்ந்து, 2027 ஆகஸ்ட் 9ஆம் தேதி மேஷ ராசியில் வக்ரமடைந்து, அக்டோபர் 20ஆம் தேதி நேர் பாதையில் மீன ராசியில் சனி பகவான் பயணிப்பார்.  இந்த மாற்றம் மொத்தம் 7 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு ஏழரைச் சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும், சில ராசிகளுக்கு சுப தொடக்கம் இருக்கும்.

மேஷம் (Aries Zodiac Sign)

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 2027 ஜூன் மாதத்தில் சனி மேஷ ராசியில் பெயர்ச்சி அடையும். இது ஏழரை சனியின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந் காலக்கட்டத்தில் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும்.  குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும்.

கும்பம் (Libra Zodiac Sign)

2027 சனியின் பெயர்ச்சியால் கும்ப  ராசிக்காரர்களுக்கு நிவாரணம் அளிக்கம். சனி மேஷ ராசியில் பிரவேசிப்பது, உங்கள் ராசிக்கான ஏழரைச் சதி காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும். வேலையில் உள்ள நீண்டகாலப் பிரச்சனைகள் மற்றும் தடைகள் நீங்கும். உங்கள் வேலை மற்றும் நிதி நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் புரிதல்கள் ஏற்படும். பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். 

இரவு நேர பணிகளால் ஆதாயம் உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் கைக்கூடும். இருப்பினும், இந்த நிவாரணம் நிரந்தரமானதாக இருக்காது. அக்டோபர் 2027-ல் சனி மீன ராசிக்குத் திரும்பிய பிறகு, கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச்  சனி மீண்டும் துவங்கும்.

மீனம் (Pisces Zodiac Sign)

2027 சனியின் பெயர்ச்சியால் சுப காரியங்கள் நடக்கும். மீன ராசிக்காரர்கள் தற்போது சனியின் ஏழரைச் சதியின் இரண்டாம் கட்டத்தை அனுபவித்து வருகின்றனர். 2027 ஜூன் மாதம் சனி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது உங்கள் ராசியில் மூன்றாம் கட்டம் தொடங்கும். முடிக்கப்படாத பணிகளை நிறைவு செய்ய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்படுவது சிறந்ததாக இருக்கும்.  எதிர்பாராத புதுமையான சூழல்கள் உண்டாகும். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும்.

சிம்மம் (Leo Zodiac Sign)

சிம்ம ராசிக்காரர்கள் தற்போது எட்டாம் சனியின் தாக்கத்தில் உள்ளனர். ஜூன் 2027-ல் சனி மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது இந்தத் தாக்கம் முடிவுக்கு வரும். இது நிதி மற்றும் குடும்ப விஷயங்களில் நிவாரணத்தைக் கொண்டு வரக்கூடும். முதலீடு மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்களுக்கான வாய்ப்புகள் இருக்கலாம். இருப்பினும், அக்டோபரில் சனி மீன ராசிக்குத் திரும்பும்போது எட்டாம் சனியின் தாக்கம் மீண்டும் தொடங்கும்.  சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூர பயணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi