• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /புதுவை எல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. வெறிச்செயல்

புதுவை எல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. வெறிச்செயல்

ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் நண்பருடன் இருந்தபோது மர்ம கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. வெடிகுண்டுகளை வீசி விரட்டிய கும்பல், வயல்வெளியில் அவரை சுற்றிவளைத்து ஆயுதங்களால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written ByShiva Murugesan
Published: Aug 11, 2026, 06:59 PM IST|Updated: Aug 11, 2026, 07:01 PM IST
joinshare
புதுவை எல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. வெறிச்செயல்
Image Credit: File

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

3

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

4

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

5

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

புதுச்சேரி எல்லையையொட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் மீது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி, பின்னர் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், புதுச்சேரி வெளியனூர் - உருவையார் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பர் ராஜாவுடன் ரெங்காரெட்டிப்பாளையம் பகுதியில் காரை கழுவிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அடுத்தடுத்து வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்

அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், சசிகுமார் மற்றும் ராஜாவை நோக்கி தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது அந்த கும்பல் மீண்டும் ஒரு வெடிகுண்டை வீசியதாகவும், அது வெடிக்காமல் கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சசிகுமார் மற்றும் ராஜா இரு திசைகளில் பிரிந்து தப்பிச் சென்றனர்.

திரைப்பட பாணியில் விரட்டிய கும்பல்

சசிகுமார் வயல்வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது, மர்ம கும்பல் அவரை பின்தொடர்ந்து ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது.

சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்ற கும்பலைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் வயல்வெளிக்குள் தப்பிச் சென்ற சசிகுமாரை அந்த கும்பல் சுற்றி வளைத்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாநில போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். புதுச்சேரி மாநில போலீசாரும் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

சசிகுமாரின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சசிகுமாருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னணியில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர் ராஜா பிடிபட்டார்

சசிகுமாருடன் இருந்த ராஜா சம்பவத்தின்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் தவளக்குப்பம் பகுதியில் சுற்றுச்சுவர் மீது ஏறி தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணி, வெடிகுண்டுகளை பயன்படுத்தியவர்கள் யார், கொலைக்கு திட்டமிட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime
Puducherry