• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /புதுவை சுதந்திர தின கலைவிழா.. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 அட்மிஷன்!

புதுவை சுதந்திர தின கலைவிழா.. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 அட்மிஷன்!

புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை 5 இடங்களில் சுதந்திர தின கலைவிழா நடைபெறுகிறது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ உள்ளிட்ட PG பாடப்பிரிவுகளுக்கு ஆகஸ்ட் 14-ல் இறுதிக்கட்ட ஸ்பாட் அட்மிஷன் நடக்கிறது.

Written ByShiva Murugesan
Published: Aug 12, 2026, 04:20 PM IST|Updated: Aug 12, 2026, 04:29 PM IST
joinshare
புதுவை சுதந்திர தின கலைவிழா.. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 அட்மிஷன்!
Image Credit: File | Puducherry independence day cultural event 2026

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இணைந்து புதுவையில் 3 நாட்கள் பிரம்மாண்ட கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

புதுவை சுதந்திர தின கலைவிழா

இக்கலைவிழா ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம், மடுகரை மந்தவெளி திடல், உருவையாறு அரசு கலை அரங்கம் மற்றும் திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடல் ஆகிய 5 இடங்களில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவில் கர்நாடகாவின் 'பூஜா குனிதா', கேரளாவின் 'பூதம்', தெலுங்கானாவின் 'குசாடி' உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறவுள்ளன.

முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ல் ஸ்பாட் அட்மிஷன்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (PTU) 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை (PG) படிப்புகளுக்குக் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறுதிக்கட்டக் கலந்தாய்வு (Spot Admission) நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டக் கலந்தாய்வு முடிந்த நிலையிலும் சில இடங்கள் காலியாக இருப்பதால் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் M.Tech, MCA, MBA, M.Sc (Medical Science Technology) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், பிற மாநில மாணவர்கள் M.Tech மற்றும் M.Sc (Medical Science Technology) பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் இதில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வருபவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தற்காலிக/பட்டயச் சான்றிதழ், சமீபத்திய இருப்பிடச் சான்று மற்றும் சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வர வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிடைத்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry