SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிசம்பர் 2-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

டிசம்பர் 2ஆம் தேதி விருச்சிக ராசியில் சூரியன், புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Written By R Balaji
Published: Nov 21, 2026, 11:22 IST | Updated: Nov 21, 2026, 11:29 IST
Join

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றின் சேர்க்கையும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், டிசம்பர் மாத தொடக்கத்தின் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யோஅத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு தொழில் பணம், கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதன் கிரகம் அறிவாற்றல், புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன், தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், டிசம்பர் 2 ஆம் தேதி அவர் விருச்சிக ராசிக்கு இடம்பெயர உள்ளார்.

விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாயின் வீட்டில் புதன் நுழையும் போது, அங்கு ஏற்கனவே சூரிய பகவான் சஞ்சரித்து வருவார். இதனால் சூரியன் மற்றும் புதன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். அறிவாற்றல், நிர்வாக திறன், புகழ் மற்றும் தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தப்படும் இந்த யோகம், 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக, நான்கு ராசிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பல்வேறு வகைகளில் சாதகமாக அமையக்கூடும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சிகள் கைகூடுவதுடன், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசியின் 8வது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக எதிர்பாராத சில நல்ல மாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் உருவாகலாம். பணியிடத்தில் உங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகளும் தேடி வரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படுவதுடன், எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசியின் 5வது வீட்டில் இந்த ராஜயோகம் அமையவுள்ளது. இதனால் கல்வி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். குறிப்பாக, மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகலாம். குடும்பத்தில் நிலவி வந்த சில பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியான சூழல் நிலவக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றம் காணக்கூடிய காலமாக இது அமையும்.

கன்னி (Virgo Zodiac Signs)

கன்னி ராசியின் மூன்றாவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாட்களாக வேலை தேடி வருபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அந்த தொடர்புகள் எதிர்காலத்தில் பொருளாதார ஆதாயத்தைப் பெற்று தரக்கூடும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படுவதுடன், வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் (Pisces Zodiac Signs)

மீன ராசியின் 9வது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் காலமாக இந்தப் பெயர்ச்சி அமையலாம். நீண்ட காலமாக தாமதமாகி வந்த முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல முன்னேற்றத்தை அடையலாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைப்பதுடன், எதிர்கால இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்க முடியும்.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES