• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

நடிகை கஸ்தூரி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களை மறுத்ததுடன், தனது அரசியல் நிலைப்பாட்டையும் தெளிப்படுத்தி உள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 12, 2026, 03:57 PM IST|Updated: Oct 12, 2026, 04:05 PM IST
joinshare
தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

தவெகவில் பிரபல நடிகை? அவரே கொடுத்த விளக்கம்!

2

Explained | "ஜனநாயகத்தை காப்போம்" டெல்லியில் தொடங்கிய March for Democracy போராட்டத்தின் முழு பின்னணி

3

புதன் பார்வை ஆரம்பம்.. இன்று முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ராஜவாழ்க்கை, வெற்றி!

4

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!

5

ஜந்தர் மந்தரில் இனி போராட அனுமதி இல்லை... மூன்று முக்கிய காரணங்கள் என்னென்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் கஸ்தூரி பங்கேற்றிருந்தார். அப்போது அமைச்சர் வெங்கட்ரமணனுடன் அவர் உரையாடிய காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இதே நிகழ்வில் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவியுடனும் கஸ்தூரி பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அவர் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளாரா என்ற விவாதம் எழுந்தது.

இந்த சூழலில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். தவெகவில் இணையப்போவதாக கூறப்படுவது உள்ளிட்ட தகவல்களை விமர்சித்த அவர், இத்தகைய அரசியல் பேச்சுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் மக்கள் புரிந்துக்கொனிருப்பாதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்! கஸ்தூரி தவெக-வில் இணைகிறார்... அது பாஜகவின் பி-டீம்... என்றெல்லாம் கதறுபவர்களை  தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை; இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் வயிற்றிச்சலை மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளார்கள்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மக்கள் பணியால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவள் நான். எக்காலத்திலும் எனக்கு வழிகாட்டி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை மட்டுமே! என் மீது முழு நம்பிக்கை வைத்துத் துணை நிற்கும் தலைமைக்கும், தோள் கொடுக்கும் கட்சிச் சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆயிரக்கணக்கான மக்கள், கேமராக்கள், பிரஸ் நிறைந்த அரங்கத்தில், ஒலிபெருக்கி சப்தத்தில், பரஸ்பர  மரியாதையுடன் பரிச்சயமாக மாண்புமிகு அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணன் அவர்களிடம் பேசியதைக்கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா?

அரசியலில் கொள்கை முரண்கள் இருக்கலாம்; ஆனால் தனிமனித விரோதத்தை நான் ஒருபோதும் பாராட்டியதில்லை. 
நாகரிகமான ஒரு உரையாடலைக்கூட தவறாக  சித்தரித்து   ஜாதி, தொழில், பெண்மை , அனைத்தையும் இழிவுப்படுத்தும் கயவர்களின் முயற்சி கீழ்த்தர அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசுவது இயல்பானது. இருப்பினும், இது போன்ற சந்திப்புகளையும் உரையாடல்களையும் வைத்து அரசியல் மாற்றங்கள் குறித்து ஊகங்கள் எழுவது வழக்கமாகி வருகிறது. கஸ்தூரி விவகாரத்திலும் அவர் அமைச்சர் மற்றும் தவெக எம்எல்ஏவிடம் பேசிய காட்சிகள் இத்தகைய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த நிலையில்தான், கஸ்தூரி பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையப்போவதாக பரவி வரும் ஊகங்களுக்கு தனது பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu