• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /முடிவுக்கு வரும் வக்ர புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொட்டதெல்லாம் பொன்னாகும்

முடிவுக்கு வரும் வக்ர புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொட்டதெல்லாம் பொன்னாகும்

Budh Peyarchi: வக்ர நிலையில் இருக்கக் கூடிய புதன் பகவான் நவம்பர் 13ஆம் தேதி முதல் நேரமாக நகரக்கூடிய வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 09, 2026, 08:32 IST|Updated: Nov 09, 2026, 08:45 IST
joinshare
முடிவுக்கு வரும் வக்ர புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொட்டதெல்லாம் பொன்னாகும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Budh Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக புதன் அறியப்படுகிறார். புதன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தற்போது புதன் வக்ர நிலையில் உள்ளார். துலாம் ராசியில் புதன் வக்ர நிலையில் உள்ளார்.  புதன் நவம்பர் 13ஆம தேதி முதல் தற்போது சஞ்சாரம் செய்து வரக்கூடிய துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், புதனின் இயல்பான அருள் வெளிப்பட உள்து. இதன் காரணமாக, குறிப்பபிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

மிதுன ராசியின் அதிபதியான புதன் இருக்கிறார். புதன்  வக்ர நிவர்த்தி மிதுன ராசியின் 5ம் வீட்டில் நடக்கும். இதனால், கல்வி, வெற்றி கிடைக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்

கன்னி (Virgo Zodiac Sign)

கன்னி ராசியின் அதிபதியான புதன், வக்ர நிவர்த்தி அடைவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் முழு அருள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். 

விவசாய பொருட்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான பாகப்பிரிவினை கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும்.

துலாம் (Libra Zodiac Sign)

புதனின் வக்ர நிவர்த்தியால்  துலாம் ராசிக்காரர்களுககு பல விதத்தில் சுபமான பலன்களை பெறுவார்கள். வியாபாரத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். 

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சு திறமை மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும்.

தனுசு (Sagittarius Zodiac Sign)

புதனின் வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் புதுவிதவிதமான அனுபவங்கள் ஏற்படும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi