SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சனியின் ராசியில் சந்திரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம்!

Chandran Peyarchi: அக்டோபர் 23ஆம் தேதியான இன்று சந்திரன் பெயர்ச்சி நடந்துள்ளது. இதானல், அடுத்த சில தினங்களுக்கு 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 23, 2026, 05:11 PM IST | Updated: Oct 23, 2026, 05:20 PM IST
Join

Chandran Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சந்திரன் அறியப்படுகிறார். சந்திரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சந்திர பகவான் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 23ஆம் தேதியான இன்று 3.04 மணக்கு சந்திரன் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அக்டோபர் 25ஆம் தேதி மாலை வரை சந்திரன் மீன ராசியில் இருப்பார். கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைவது சில ராசிக்காரர்களுககு செல்வம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  சனியில் இருக்கும் மீன ராசியில் சந்திரன் பெயர்ச்சி அடைவது சில ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

சனியின் நட்சத்திரத்தில்  சந்திரன் பெயர்ச்சி அடைவது மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்த வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

பூமி விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியாக சுபச்செய்திகள் கிடைக்கும்.அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சனப் பேச்சுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

மேலும் படிக்க: சுக்கிரன் பெயர்ச்சி: 7 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.. நாளை முதல் ராஜயோகம்!!

சிம்மம் (Leo Zodiac Sign)

சந்திரன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும்.  மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். 

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியம் நிறைவேறும். உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.  வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.

துலாம் (Libra Zodiac Sign)

சந்திரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். நட்பால் ஆதாயம் ஏற்படும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்கள் வழியில் கிடைக்கும். வியாபார விரிவாக்க முயற்சிகளில் பொறுமை வேண்டும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: குருவால் உருவாகும் மங்கள யோகம்! இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தீபாவளிக்கு பிறகு பொற்காலம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES