Group 4 Free Coaching: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்காக அறிவிப்பை அக்டோபர் 6ஆம் தேதி வெளியிட்டது. குரூப் 4 மூலம் இந்தாண்டு மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பம் தொடங்கும் தேதி - அக்டோபர் 6
இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை
விண்ணப்பத் திருத்த சாளர காலம் - நவம்பர் 9ஆம் தேதி மதியம் 12.01 மணி முதல் நவம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை
தேர்வு நடைபெறும் நாள், நேரம் - 2027 ஜனவரி 10 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்
தென்காசி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, மற்றும் RRB, போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group IV. 2026 6,574 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group IV தேர்வானது வரும் 10.01.2027 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இணையவழியில் விண்ணப்பம் செய்ய வேண்டிய கடைசி நாள் நவம்பர் 05.11.2026. கூடுதல் விபரங்களை அறிய https://www.tnpsc.gov.in / என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும். இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (கதவு எண் : 168, முகமதியா நகர், KFC பின்புறம் ) குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை 15.10.2026 காலை 10.30. மணிக்கு துவங்கப்படவுள்ளது
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு Smart Board பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புத்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Tenkasi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 04633-213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC Group IV. 2026 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.