• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /சோகத்தில் CSK வீரர்கள்... ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆபரேஷன் - ஐபிஎல் விளையாடுவாரா?

சோகத்தில் CSK வீரர்கள்... ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆபரேஷன் - ஐபிஎல் விளையாடுவாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்டர் ஆயுஷ் மாத்ரே காயத்தில் சிக்கியிருந்த நிலையில், தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Written BySudharsan G
Published: Oct 23, 2026, 05:36 PM IST|Updated: Oct 23, 2026, 05:42 PM IST
joinshare
சோகத்தில் CSK வீரர்கள்... ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆபரேஷன் - ஐபிஎல் விளையாடுவாரா?
Image Credit: CSK Ayush Mhatre | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பங்குச்சந்தை டிப்ஸ்களை நம்பி ஏமாற வேண்டாம்: முதலீட்டாளர்களுக்காக அறிமுகமானது Kwala Intel!

பங்குச்சந்தை டிப்ஸ்களை நம்பி ஏமாற வேண்டாம்: முதலீட்டாளர்களுக்காக அறிமுகமானது Kwala Intel!

2

TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?

3

சோகத்தில் CSK வீரர்கள்... ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆபரேஷன் - ஐபிஎல் விளையாடுவாரா?

4

சனியின் ராசியில் சந்திரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம்!

5

இ-டெண்டர் புதிய அப்டேட்! அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமீப காலத்தில் கிடைத்த பெரிய ஜாக்பாட் என்றால் அது ஆயுஷ் மாத்ரே தான். 'இளம் ஹிட்மேன்' என அழைக்கப்படும் ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கேவின் நம்பிக்கை நாயகனாக உயர்ந்துவிட்டார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டனாக செயல்பட்டிருந்தார். இதன்மூலம் இவர் வருங்கால சிஎஸ்கே கேப்டனாகவும் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார்.

மேலும் படிக்க | சூப்பர் கிங்ஸ் அணியில் பொல்லார்ட்... ஷாக்கான MI ரசிகர்கள் - ஏலத்தில் சுவாரஸ்யம்

ஆயுஷ் மாத்ரேவுக்கு அதிர்ச்சி

ஆனால், ஆயுஷ் மாத்ரே கடந்த ஐபிஎல் சீசனில், தொடை தசைநார் கிழிவு காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் போனது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

அதன்பின் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் தொடர் பயிற்சியில் இருந்து காயத்தில் இருந்து மீண்டு வந்தார் ஆயுஷ் மாத்ரே. உள்நாட்டு தொடர்களில் விளையாட தயாரான அவருக்கு ரஞ்சி தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அறுவை சிகிச்சை

ஆயுஷ் மாத்ரே வலது தொடை தசைநார் கிழிவு ஏற்பட்டு கிரேட் 4 காயம் காரணமாக 3-4 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த காயத்திற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

நடக்க தொடங்கினார் ஆயுஷ் மாத்ரே

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் PTI செய்தி முகமைக்கு அளித்த தகவலில், "மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மருத்துவர் தின்ஷா பர்திவாலா, ஆயுஷ் மாத்ரேவுக்கு வலது தொடை தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். தற்போது நன்றாக குணமடைந்து வருகிறார்.

மேலும், முழுமையாக குணமடைந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு சுமார் 2-3 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இன்று காலை நிலவரப்படி, ஆயுஷ் மாத்ரே ஊன்றுகோல்களின் உதவியுடன் மெதுவாக நடக்கத் தொடங்கி உள்ளார்" என்றார்.

சிஎஸ்கேவுக்கு கெட்ட செய்தி

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கு மாதங்கள் என்றால் நிச்சயம் பிப்ரவரி மாதம் வரை அவரால் விளையாட முடியாது.

அதன்பின் அவரால் இதே பார்மில் மீண்டு வந்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி ஆயுஷ் மாத்ரேவுக்கு தகுந்த மாற்று வீரரை இப்போதே ரெடி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும் படிக்க | சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai Super Kings