• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சிம்மத்தில் குரு - சந்திரன்: உருவாகும் கஜகேசரி யோகம்.. 4 ராசிகளுக்குப் பணமழை, தொட்டதெல்லாம் வெற்றி!

சிம்மத்தில் குரு - சந்திரன்: உருவாகும் கஜகேசரி யோகம்.. 4 ராசிகளுக்குப் பணமழை, தொட்டதெல்லாம் வெற்றி!

Gajakesari Yoga in Leo: சிம்ம ராசியில் நிகழும் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் மூலம் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கு பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் கிடைக்கவுள்ளன.

Written ByR Balaji
Published: Oct 27, 2026, 11:15 AM IST|Updated: Oct 27, 2026, 11:19 AM IST
joinshare
சிம்மத்தில் குரு - சந்திரன்: உருவாகும் கஜகேசரி யோகம்.. 4 ராசிகளுக்குப் பணமழை, தொட்டதெல்லாம் வெற்றி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இனி இலவச வேட்டி சேலை இல்லை! பயனாளிகளுக்கு ரூ.1000 -புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு

இனி இலவச வேட்டி சேலை இல்லை! பயனாளிகளுக்கு ரூ.1000 -புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு

2

கரையைக் கடக்கும் அர்னாப் புயல்: புதுச்சேரியில் படகுகள் இயக்கம் ரத்து, மின்துறை அவசர எச்சரிக்கை!

3

நவம்பரில் LPG சிலிண்டர் விலை குறைகிறதா? e KYC, PNG.. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அப்டேட்ஸ்

4

சிம்மத்தில் குரு - சந்திரன்: உருவாகும் கஜகேசரி யோகம்.. 4 ராசிகளுக்குப் பணமழை, தொட்டதெல்லாம் வெற்றி!

5

தவெக அரசின் லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது -எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் சேர்க்கையும் ஒவ்வொரு ராசியிலும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம்பெயர்வதாகவும், நவம்பர் 2 ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசிக்குள் பிரவேசிப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிம்ம ராசியில் குரு, சந்திரன் இணையும் நிலை உருவாகிறது. இந்த சேர்க்கை கஜசேகரி யோகத்தை உருவாக்குகிறது.

மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படும் கஜகேசரி யோகம், செல்வம், தொழில் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் குடும்ப மகிழ்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுலுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அந்த வகையில், நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த யோகத்தால் சாதகமான பலன்களை பெறக்கூடிய 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல சாதகமான விஷயங்களை வழங்க இருக்கிறது. முடிவெடுக்கும் ஆற்றம் மேம்படும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொளவதற்கான வாய்ப்புகள் உருவாகக்கூடும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் மேலதிகாரிகள் பாராட்டை பெறலாம். நீண்ட காலமாக உழைத்து வந்தவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கக்கூடும். இருப்பினும் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கடகம் (Cancer Zodiac Signs)

கடக ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். குடும்ப தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானத்தை பெருக்குவதற்கான புதிய வழிகள் கிடைக்கலாம். பணம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் புரிதல் அதிகரிப்பதுடன் திருமண வாழ்க்கையிலும் இணக்கமான சூழல் நிலவக்கூடும்.

சிம்மம் (Leo Zodiac Signs)

சிம்ம ராசியிலேயே குரு, சந்திரன் இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். பணியிடத்தில் உற்சாகத்துடன் செயல்பட்டு, ஒப்படைக்கப்படும் பணிகளை திறம்பட முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான சாதகமான செய்திகள் கிடைக்கலாம். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தங்களின் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்யலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான தருணங்கள் அமையக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு புதிய உறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம் (Scorpio Zodiac Signs)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகலாம். ஏற்கனவே சந்தித்து வந்த பணி சிக்கல்கள் குறையக்கூடும். வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சியை நோக்கி செயல்படுவர்கள் தங்களின் திட்டங்களை மறுபரிசீலனை செய்து முன்னேறலாம். முதலீடுகள் தொடர்பாக நல்ல பலன்களை எதிர்பார்ப்பவர்கள் அவசர முடிவுகளை தவிர்த்து, உரிய ஆய்வுக்கு பிறக்வே செயல்படுவது அவசியம். உடல்நலத்தை பொறுத்தவரை, சீரான உணவுப் பழக்கம், போதிய ஓய்வு மற்றும் அன்றாட நடைமுறைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan