SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குரு - செவ்வாய் சேர்க்கை.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு ராஜயோகம், பணமழை!

Guru - Mars Conjunction: நவம்பர் 12ஆம் தேதி சிம்ம ராசியில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் மேஷம், சிம்மம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு, பணவரவு மற்றும் தொழில் வளர்ச்சியில் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Written By R Balaji
Published: Nov 11, 2026, 12:27 PM IST | Updated: Nov 11, 2026, 12:33 PM IST
Join

நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் ஜோதிட ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுட்த்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக சில கிரகங்களின் சேர்க்கை குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான சூழலை உருவாக்கும். அந்த வகையில், நவம்பர் 12 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவானுடன் செவ்வாய் இணைவதால் குரு - செவ்வாய் சேர்க்கை உருவாகிறது.

குரு பகவான் செல்வம், கல்வி, ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சியை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். செவ்வாய் பகவான் வீரம், தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலின் அடையாளமாக விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைவது ஜோதிடத்தில் முக்கிய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இருப்பினும் மேஷம், சிம்மம், கும்பம் ஆகிய முன்று ராசிகளை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் தொழில் வளர்ச்சியில் கூடுதல் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேஷம் (Aries Zodiac Signs)

மேஷ ராசிக்காரர்களுக்கு 5ஆம் வீட்டில் குரு - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த சில நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழலாம். குறிப்பாக தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் திறமையை நிரூபிக்கக்கூடிய சூழல் அமையும். இதுவரை கிடைக்காமல் இருந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். புதிய வருமானத்திற்கான வழிகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் பொருளாதார நிலை மேம்படுவதுடன் எதிர்காலத்திற்கான சேமிப்பையும் அதிகரிக்க முடியும்.

சிம்மம் (Leo Zodiac Signs)

சிம்ம ராசிக்காரர்களின் முதல் வீட்டிலேயே குரு மற்றும் செவ்வாய் இணைவதால் இந்த கிரக சேர்க்கை அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நவம்பர் 12 ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு விஷயங்களில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, வேலைக்காக முய்றசி செய்து வருபவர்களுக்கு விரும்பிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் அங்கீகாரமும் அதிகரிக்கலாம். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். முக்கியமான திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு வருபவர்களுக்கு அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க சாதகமான காலமாக அமையும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைப்பதால் நிதி நிலையும் வலுப்பெறலாம்.

கும்பம் (Aquarius Zodiac Signs)

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் குரு-செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் தாக்கத்தால் தொழில் மற்றும் பணியிட வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைப்பதற்கான சூழல் அமையும். இதுவரை மேற்கொண்ட கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். இதன் மூலம் புதிய பொறுப்புகள், பாராட்டுகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் சார்ந்த முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, பொருளாதார நிலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES