• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

Guru - Sevvai Peyarchi Palangal: சிம்ம ராசியில் நவம்பர் 12 ஆம் தேதி நிகழவுள்ள குரு - செவ்வாய் சேர்க்கையால், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும்.

Written ByR Balaji
Published: Nov 03, 2026, 12:14 PM IST|Updated: Nov 03, 2026, 12:18 PM IST
joinshare
சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு

பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு

2

தங்கம் ரூ.98000 ஆக குறையுமா? வைரலாகும் தகவலின் பின்னணி என்ன? உண்மை இதுதான்!

3

சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

4

’இருமுடி’ படக்குழுவுக்கு வந்த சிக்கல்! குழந்தை நட்சத்திரம் குறித்து பேசியதால் வந்த வினை..

5

நேபாளத்தில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள், ஒருவர் பலி: கதிகலங்க வைக்கும் வீடியோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தைரியம், துணிச்சல், வலிமை மற்றும் செயல்பாடுகளின் அடையாளமாக விளங்கும் செவ்வாய், குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான செவ்வாய், தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் நவம்பர் 12ம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். ஏற்கனவே சிம்ம ராசியில் குரு பகவான் இருப்பதால், இந்த பெயர்ச்சியின் மூலம் குரு - செவ்வாய் சேர்க்கை உருவாகிறது. குரு மற்றும் செவ்வாய் இணைவது ஒருவரின் தன்னம்பிக்கை முயற்சி தைரியம் மற்றும் முன்னேற்றத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம், வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள்ளது.

அந்த வகையில், சிம்ம ராசியில் ஏற்படும் குரு - செவ்வாய்   சேர்க்கையால் நன்மைகளை பெறக்கூடிய ராசிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை மூன்றாவது வீட்டில் நிகழ்கிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குறிப்பாக புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகும். பொருளாதார ரீதியாக இருந்த சிக்கல்கள் படிப்படியாக குறையலாம்.

மேலும், தன்னம்பிக்கை அதிகரிப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் சாதகமான முடிவுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு - செவ்வாய் சேர்க்கை 12வது வீட்டில் ஏற்படுகிறது. இதன் மூலம் வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் உருவாகலாம். வேலை தேடி வருபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் உங்கள் திறமைகள் மற்றும் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கலாம். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடைபெறலாம்.

மேலும், காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக அமையலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சில விஷயங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு - செவ்வாய் சேர்க்கை 11வது வீட்டில் நிகழ்கிறது. இதனால் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களும் அமையலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த திட்டங்கள் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் காணலாம்.

குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதுடன், உறவினர்களின் ஆதரவும் அதிகரிக்கலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார முன்னேற்றம் காரணமாக வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan