• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு

பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு

Tamil Nadu government scheme : 13 மாவட்ட பழங்குடியினர் பகுதிகளுக்கு 100% மின்சாரம் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 03, 2026, 01:00 PM IST|Updated: Nov 03, 2026, 01:04 PM IST
joinshare
பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு
Image Credit: Tamil Nadu government scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை to புதுச்சேரி..இனி கப்பல்லையே போகலாம்! தமிழ்நாடு அரசின் புது திட்டம்..

சென்னை to புதுச்சேரி..இனி கப்பல்லையே போகலாம்! தமிழ்நாடு அரசின் புது திட்டம்..

2

முடிந்தது ஹர்திக் பாண்டியா டிரேட்? பதிலுக்கு 2 வீரர்களை தரும் ஐபிஎல் அணி! முழு விவரம்

3

TASMAC ஊழியர்கள் போராட்டம்: 245 பேர் சஸ்பெண்ட், 1729 பேருக்கு நோட்டீஸ்... என்ன நடக்குது?

4

பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு ஜாக்பாட்! விடுபட்ட வீடுகளுக்கும் மின் இணைப்பு

5

தங்கம் ரூ.98000 ஆக குறையுமா? வைரலாகும் தகவலின் பின்னணி என்ன? உண்மை இதுதான்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government scheme : தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் முழுமையான மின்வசதியை ஏற்படுத்தும் வகையில், ரூ.34 கோடியே 1 லட்சத்து 74 ஆயிரம் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு இணையான அனைத்து வசதிகளையும் பழங்குடியின மக்களுக்கும் தடையின்றி வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.  

அமைச்சர் வன்னி அரசு தந்த உறுதிமொழி

சட்டமன்றத்தில் நடைபெற்ற 2026-2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது, துறை அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையினருடன் ஒருங்கிணைந்து அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

குறிப்பாக, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலமாக பழங்குடியினர் குடியிருப்புகள் முழுமையாக மின்மயமாக்கப்படும் என்றும், இதுவரை மின் இணைப்பு வசதி பெறாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு, எந்தவொரு குடும்பமும் விடுபடாமல் நூறு சதவீதம் மின்சார வசதி உறுதி செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.  

உள்கட்டமைப்பு பணிகள்

அமைச்சரின் இந்த அறிவிப்பினை நேரடியாகச் செயல்படுத்தும் நோக்கில், 2026-2027-ஆம் ஆண்டு ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (DAPST) கீழ் 13 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் இப்பணிகள் மூலம் நேரடியாகப் பயனடைவர்.  

இம்மாவட்டங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மொத்தம் 179 அடிப்படை கட்டமைப்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளன:  

கல்வி, தகவல் தொடர்பு: இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் கிராம அறிவு மையங்கள்.  

விவசாயம், பாசனம்: மின்மோட்டார் வசதியுடன் கூடிய பாசன அமைப்புகள், தானிய உலர்களங்கள் மற்றும் கதிரடிக்கும் களங்கள்.  

போக்குவரத்து, குடிநீர்: தார்ச் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், குழாய் பதிக்கும் பணிகள் (பைப் லைன்) மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்.  

சுகாதாரம், சுற்றுச்சூழல்: கழிவுநீர் கால்வாய்கள், நவீன சமுதாய சுகாதார வளாகங்கள், வெள்ளப் பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் தடுப்புச் சுவர்கள்.  

பொது உள்கட்டமைப்பு: அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், சுற்றுச்சுவர் வசதிகள், மயான காத்திருப்புக் கூடங்கள், மயான சாலை மற்றும் கொட்டகைகள், தகன மேடைகள் மற்றும் இடுகாட்டுச் சுற்றுச்சுவர்கள்.  

பொருளாதார மேம்பாடு: பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து சேகரிக்கும் சிறுவன மகசூல் பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டல் செய்திடும் வகையில் தொழிற்கூடக் கட்டிடங்கள், மேற்கூரை வசதிகள் மற்றும் பிரத்யேக மின் இணைப்புகள்.  

நிர்வாக ஒருங்கிணைப்பு மற்றும் கள ஆய்வுப் பணிகள்

இப்பணிகளைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.34,01,74,000 நிதியினை பழங்குடியினர் நல இயக்குநரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து செலவினங்களை மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தாட்கோ (TAHDCO) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

அதேபோன்று, மின்சார வசதி இல்லாத பழங்குடியினரின் வீடுகள் மற்றும் குடியிருப்புகளைக் கண்டறிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் (TANGEDCO) இணைந்து உடனே கள ஆய்வுகளை மேற்கொண்டு, மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஒப்புதல்களைப் பெற்றுத் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு அரசு செயலாளர் அரசாணை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu