• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /குரு பெயர்ச்சி: 2027ல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. செல்வம், பொன் குவியும்

குரு பெயர்ச்சி: 2027ல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. செல்வம், பொன் குவியும்

Guru Peyarchi 2027: 2027ஆம் ஆண்டில் குரு பகவான் மூன்று முறை தனது ராசியை மாற்ற உள்ளார். குரு பகவானின் பெயர்ச்சி 2027ஆம் ஆண்டு முழுவதும் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 17, 2026, 12:11 IST|Updated: Nov 17, 2026, 12:25 IST
joinshare
குரு பெயர்ச்சி: 2027ல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. செல்வம், பொன் குவியும்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Peyarchi 2027: ஜோதிடத்தில் மிகவும்  சுப கிரகமாக  கருதப்படுகிறார் குரு. குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.  குருவின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குருவின் பெயர்ச்ச 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 2027ஆம் ஆண்டில் குருவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது, 2027ஆம்  ஆண்டு குரு பகவான் மூன்று முறை தனது ராசியை மாற்ற உள்ளார். தற்போது குரு சூரியனின் ராசியான சிம்மத்தில் உள்ளது. 

ஆனால், வரும் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரியில் அது விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்குள் பெயர்ச்சி அடையும். இதற்கு பிறகு, குரு ஜூன் மாதத்தில் மீண்டும் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். ஆண்டு இறுதியில் நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.  இவ்வாறு 2027ஆம் ஆண்டில் குரு பகவான் மூன்று முறை பெயர்ச்சி அடைவது சில ராசிகாரர்களுக்கு  நேர்மறையான ஆற்றல் உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மிதுனம் (Gemini Zodiac Sign)

குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். 2027ஆம் ஆண்டில் புதிய வழிகள் பிறக்கும். தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: சனி பெயர்ச்சி: அடுத்த 86 நாட்கள் பொற்காலம்.. 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீரும், கோடீஸ்வர யோகம்!

கடகம் (Cancer Zodiac Sign)

குரு பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டில் செல்வம் பெருகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து நிதி ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உலக வாழ்க்கை குறித்த புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல்திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். 

மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.

மேலும் படிக்க: சுக்கிரன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு அற்புதமான நேரம்.... பணம், பதவி, புகழ் சேரும்

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

குருவின் பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் பெருகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். கல்வி பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகம் தொடர்பான உடனிருப்பவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிக்கவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். புதுவிதமான கருவிகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலப் பிரச்சனைகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி (Virgo Zodiac Sign)

குருவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உருவாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை விரிவாக்கத்திற்கான எண்ணங்கள் கைக்கூடி வரும். ஓவியத்துறைகளில் சாதகமான சூழல் அமையும். மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை அறிந்து முடிவெடுக்கவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.

மேலும் படிக்க: ராகு, கேது பெயர்ச்சி: 4 ராசிகளின் தலைவிதி மாறும்... டிசம்பர் 5 முதல் கோடீஸ்வர யோகம்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi