ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றின் சேர்க்கையும் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2026 செப்டம்பர் 01 ஆம் தேதி, கிரகங்களின் தளபதியான செவ்வாய்யும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிமான் சனி பகவானும் 90 டிகிரி கோணத்தில் ஒருவருக்கொருவர் கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரிக்க உள்ளனர். இதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த 'கேந்திர யோகம்' உருவாகிறது.
செவ்வாய் ஆற்றல், வீரம் மற்றும் நில ஆதிக்கத்தை குறிப்பவர்; மறுபுறம் சனி பகவான் பொறுமை, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை குறிப்பவர். இவ்விரு கிரகங்களின் கேந்திரப் பார்வை ஒரு மனிதருக்கு தைரியம், அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் ஆற்றலை தரும்.
இந்த யோகத்தால் நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த பணிகள் வேகம் பெறும். தொழில் மற்றும் ரியல் எஸ்டேட், உற்பத்தி, இயந்திர துறைகளில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அப்படி இந்த கேந்திர யோகத்தால் அதிக நன்மைகளை அடையப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார்? என்று இங்கு பார்க்கலாம்.
அலுவலகத்தில் உங்களின் உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு புதிய தலைமை பொறுப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். எனினும் வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது சேமிப்பை உயர்த்தும். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். தம்பதியரிடையே அல்லது காதல் உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி புரிதல் உண்டாகும்.
நீண்ட காலமாக பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிலுவையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் வேலைகள் சுமூகமாக முடியும். தொழிலதிபர்கள், புதிய ஒப்பந்தங்கள் மூலமாகப் பெரிய அளவிலான லாபத்தை ஈட்டுவார்கள். பங்குச்சந்தை அல்லது பூர்வீகச் சொத்துக்கள் மூலம் எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களின் விடாமுயற்சிக்கு உரிய வெற்றி கிடைத்து சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
வேலை தேடும் பட்டதாரிகளுக்குப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைக்கான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். பார்ட்னர்ஷிப் முறையில் தொழில் செய்பவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவார்கள். அதிகார மையத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைத்து வியாபாரம் விரிவடையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புகழும் நற்பெயரும் உயரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
நிதி நெருக்கடிகள் முற்றிலும் அகன்று பணப்புழக்கம் சீராகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்குத் தேவையான முதலீடுகள் சுலபமாகக் கிடைக்கும். தற்போதைய வேலையில் திருப்தி இல்லாதவர்களுக்கு விருப்பமான இடமாற்றம் அல்லது புதிய வேலை வாய்ப்புகள் அமையும். அதே சமயம் நிதி விவகாரங்களில் அடுத்தவர்களை நம்பி கடன் கொடுப்பதையோ அல்லது அவசர முடிவுகள் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)