SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கேது - செவ்வாய் சேர்க்கை.. இந்த 4 ராசிகள் இன்று முதல் உஷார்.. வேலை, தொழிலில் கவனம்

Ketu Mars Conjunction: நவம்பர் 12ஆம் தேதியான இன்று கேது செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. சிம்ம ராசியில் நடக்கும் இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 12, 2026, 09:46 AM IST | Updated: Nov 12, 2026, 09:55 AM IST
Join

Ketu Mars Conjunction: ஜோதிடத்தில்  முக்கியத்துவம் வாய்த்ந கிரகமாக கேது அறியப்படுகிறார். கேதுவின் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். தற்போது கேது சிம்ம ராசியில் உள்ளார். இந்த நிலையில், கேது செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. நவம்பர் 12ஆம் தேதியான இன்று இரவு 8.30 மணிக்கு செவ்வாய் கிரகம் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.   

சிம்ம ராசியில் குரு அக்டோபர் 31 முதல் இருக்கிறார். மேலும், கேதுவும் அதே ராசியில் உள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி வரை சிம்ம ராசியில் கேது, செவ்வாய் நிலைத்திருப்பார். கேது செவ்வாய் சேர்க்கையால்  சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

செவ்வாய் கேது சேர்கைகையால் மேஷ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மேஷ ராசியின் 5ஆம் வீட்டில் செவ்வாய் கேது சேர்க்கை நடக்கிறது. இதானல், உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். நினைத்த காரியங்கள் நிறைவேற்றுவதில் சிக்கல் நீட்டிக்கலாம். முதலீடு செய்யும்போது அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் எந்தவொரு பெரிய ஒப்பந்தங்களையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். மேலும், உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு, திருமணம் வரன் கைக்கூடும்.

மேலும் படிக்க: குரு - செவ்வாய் சேர்க்கை.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு ராஜயோகம், பணமழை!

கடகம் (Cancer Zodiac Sign)

கேது செவ்வாய் சேர்க்கை கடக ராசியின் 2வது வீட்டில் நடக்கிறது. கேது செவ்வாய் சேர்க்கையால் வீட்டில் பிரச்னைகள் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழிலில் நஷ்டங்களை சந்திக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். 

வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.

மேலும் படிக்க: சூரியன் பெயர்ச்சி: இன்னும் 6 நாட்களில் 5 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், ஜாக்பாட் காத்திருக்கு

சிம்மம் (Leo Zodiac Sign)

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். முயற்சியில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரும். சூழ்நிலையைப் புரிந்து அதற்கேற்ப செயல்படவும். செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும். உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். முயற்சிக்கேற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

விருச்சிக ராசியின் 10வது வீட்டில் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். 

மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் எந்தவொரு பணியையும் செய்து முடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்கவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின் போது நிதானம் வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: வக்ர சனியின் ஆட்டம்.. டிசம்பர் வரை ஆபத்தான காலக்கட்டம்.. இந்த 5 ராசிகள் உஷார்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES