SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விருச்சிகத்தில் உதயமாகும் புதன்: 3 ராசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்! பதவி உயர்வு, தொழிலில் லாபம்

புதன் உதயத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு வாய்ப்புகளும், தொழிலில் புதிய ஒப்பந்தங்களும் ஏற்பட்டு தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.

Written By R Balaji
Published: Oct 21, 2026, 04:46 PM IST | Updated: Oct 21, 2026, 04:52 PM IST
Join

ஜோதிடத்தில் புதன் பகவான் அறிவாற்றல், பேச்சுத்திறன், வணிகம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவருடைய சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் நிதி சார்ந்த செயல்பாடுகளில் புதனின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் புதனின் ராசி மாற்றம், அஸ்தமனம் மற்றும் உதயம் போன்ற நிகழ்வுகள் ஜோதிடத்தில் கவனம் பெறுகின்றன.

அந்த வகையில், 2026 நவம்பர் 11 ஆம் தேதி விருச்சிக ராசியில் புதன் உதயமாகிறது. இந்த கிரக நிகழ்வு அனைத்து ராசிகளிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக தொழிலில் புதிய வாய்ப்புகள், வருமான முன்னேற்றம் மற்றும் பணியிடத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்கான சூழல் உருவாகும் 3 ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் அவர்களுக்கு புதிய அனுபவங்களையும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வழங்கக்கூடும். ஆரம்பத்தில் சில சவால்களை சந்தித்தாலும், விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்ல பலன்களை பெற உதவும்.

தொழில் மற்றும் வணிகத்தில் புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கலாம். கூட்டுத் தொழில் தொடங்க விரும்புபவர்கள் தங்களுடைய திட்டங்களை சரியாக ஆராய்ந்து செயல்படலாம். சமூக பணிகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பெயரும் மதிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிப்பதால், முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தெளிவு கிடைக்கலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவது தொடர்பாக திட்டமிடுபவர்கள் தங்களுடைய நிதிநிலையை மதிப்பிட்டு முடிவெடுக்கலாம். ஒட்டுமொத்தமாக முயற்சிக்கும் உழைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலமாக இது அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையலாம். பணியிடத்தில் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவதுடன், சக ஊழியர்களுடன் இணக்கமான உறவை பேணுவதும் நன்மை அளிக்கக்கூடும். வேலை செய்பவர்களுக்கு அவர்களின் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கா வாய்ப்புள்ளது. பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர்பார்ப்பவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உருவாகலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். எனினும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதும் தொடர்ந்து முயற்சி செய்வதும் அவசியம்.

வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பது அல்லது வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது போன்ற சாதமான சூழல்கள் உருவாகலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளை ஆராயவும் வாய்ப்புள்ளது. அதேசமயம், முதலீடுகள் மற்றும் பெரிய செலவுகள் தொடர்பாக நிதானமாக முடிவெடுப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை துணையுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகளை குறைக்க முடியும். பரஸ்பர புரிதல் அதிகரிப்பதால் உறவில் நெருக்கம் மேம்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் தொழில்முறை வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கும் காலமாக இருக்கலாம். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகலாம். அலுவலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலம் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம். பதவி உயர்வு அல்லது முக்கியமான பொறுப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தங்களுடைய திறமைகளை மேம்படுத்திக் கொள்வதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் எதிர்கால வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்களின் ஆதரவு மற்றும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானத்தை அதிகரிக்கப் புதிய வழிகளை ஆராய முடியும். இருப்பினும், எதிர்பாராத லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சில கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் வாய்ப்புகள் உருவாகலாம். துணையுடன் நேரத்தைச் செலவிடுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதும் உறவை வலுப்படுத்த உதவும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES