SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

லட்சுமி நாராயண யோகம்: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. பொற்காலம் ஆரம்பம்

Lakshmi Nayana Yog: சுக்கிரன் புதன் சேர்க்கையால் நவம்பர் 22ஆம் தேதியான நாளை லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 21, 2026, 08:11 IST | Updated: Nov 21, 2026, 08:22 IST
Join

Lakshmi Nayana Yog:  ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியின்போதும் அவ்வப்போது சுப யோகங்கள் உருவாகுகிறது. இந்த சுப  யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். அந்த வகையில், நாளை (நவம்பர் 22) லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது.  நவம்பர் 22ம் தேதியான நாளை சுக்கிரன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உளளார். ஏற்கனவே துலாம் ராசியில் புதன் இருக்கிறார். எனவே, நாளை புதன் சுக்கிரன் சேர்க்கை நடக்கிறது. இதனால், லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. லட்சுமி நாராயண யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். எனவே அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

லட்சுமி நாராயண யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். சுப காரியங்கள் நடக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் உண்டாகும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகளில் இருந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் நிறைவேறும். உழைப்புக்கு உரிய மதிப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும்.

மேலும் படிக்க: குரு வக்ர பெயர்ச்சி: டிசம்பர் முதல் 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

மிதுனம் (Gemini Zodiac Sign)

லட்சுமி நாராயண யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் சுப பலன்கள் கிடைக்கும்.உலக வாழ்க்கை குறித்த புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல்திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். 

உயர் அதிகாரிகள் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறுந்தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.

மேலும் படிக்க: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: 5 ராசிகளுக்கு குட் லக்!! நவம்பர் 22 முதல் நல்ல காலம் ஆரம்பம்

கன்னி (Virgo Zodiac Sign)

லட்சுமி நாராயண யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் உண்டாகும். செயலில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலையில் கவனம் வேண்டும். முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்பட்டு, புதிய பாதை புலப்படும். நண்பர்கள் ஆதரவுடன் சில பணிகளை முடிப்பீர்கள். இனம் புரியாத தேடல்களால் குழப்பம் ஏற்படும். கடன் தொடர்பான உதவிகள் சாதகமாகும். 

கடன் பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சூழலுக்கு ஏற்ப பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். நீண்ட தூர பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். மறைமுகமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உருவாகும்.

துலாம் (Libra Zodiac Sign)

துலாம் ராசிக்காரர்கள் எண்ணற்ற பலன்களை பெறுவார்கள் இந்த காலக்கட்டத்தில் திருமண வரன் அமையும். வேலையில்லாதவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றங்கள் உருவாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். முகத்தில் பொலிவு ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். சுப காரியங்களில் இருந்த மந்த நிலை விலகும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் பிறக்கும்.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.

மேலும் படிக்க: செவ்வாய் - குரு - கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் குவியும்


 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES