சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்.. டிசம்பரில் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!
துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியானதால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால், வரும் டிசம்பர் மாதத்தில் 3 ராசிக்காரர்களுக்குப் பொருளாதார முன்னேற்றமும் அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அசுரர்களின் குருவாக போற்றப்படுபவர் சுக்கிர பகவான். இவர் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம் மற்றும் சுகபோகங்களின் காரகராக விளங்குகிறார். இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த சுக்கிரன், நவம்பர் 22 ஆம் தேதி தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் பஞ்சமகாபுருஷ யோகங்களில் முக்கியமான ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் செல்வ வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் பல்வேறு சுப வாய்ப்புகளை வழங்கக்கூடியதாக கருதப்படுகிறது. இந்த யோகம் 2027 ஜனவரி 1 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையப்போகிறது. குறிப்பாக, மூன்று ராசிகளை சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதுடன், நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பணப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
மேஷ ராசிக்காரர்களின் 7வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகத்தின் பலன்கள் கிடைக்கப்போகின்றன. இதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். குறிப்பாக, சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், கணவன் - மனைவி இடையிலான நெருக்கமும் அதிகரிக்கும்.
துலாம் (Libra Zodiac Signs)
துலாம் ராசியின் முதல் வீட்டிலேயே சுக்கிரன் அமர்ந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். குறிப்பாக, தேவையற்ற செலவுகள் கட்டுக்குள் வருவதால் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதார நிலையும் மேம்படும். இதுவரை மனதில் இருந்து வந்த கவலைகளும், அழுத்தங்களும் படிப்படியாக குறையலாம். நீண்ட காலமாக தொடர்ந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் மற்றும் சொத்து சேர்க்கைக்கான சூழல் உருவாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையவும் வாய்ப்புள்ளது.
மகரம் (Capricorn Zodiac Signs)
மகர ராசியின் 10வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் தொழில் மற்றும் பணியிடத்தில் சாதகமான பலன்களை பெறக்கூடும். அலுவலகத்தில் மேற்கொள்ளும் பணிகள் தடையின்றி நடைபெறுவதுடன், உங்களின் திறமைகளை உயர் அதிகாரிகள் கவனித்து பாராட்டும் சூழலும் அமையும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கலாம். சொந்தமாக வீடு அல்லது வாகனம் வாங்கத் திட்டமிடுபவர்களின் முயற்சிகளும் கைகூட வாய்ப்புள்ளது. மேலும், நீண்ட நாட்களாக கிடைக்காமல் நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கக்கூடும். இதனால் நிதி நிலைமை வலுப்பெறுவதுடன் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)