SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சிம்ம ராசிக்கு மாறும் செவ்வாய்.. இந்த 3 ராசிகளுக்கு பணம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை!

Sevvai Peyarchi: நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாவதால், கன்னி, மகரம், மீனம் ஆகிய 3 ராசிக்காரர்கள் பணம், வேலை, உடல்நலம் மற்றும் பயண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Written By R Balaji
Published: Nov 12, 2026, 01:40 PM IST | Updated: Nov 12, 2026, 01:52 PM IST
Join

செவ்வாய் தைரியம், ஆற்றல், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிக்கும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய், நவம்பர் 12 ஆம் தேதி சிம்ம ராசிக்கு இடம்பெற உள்ளார். இந்த கிரக மாற்றம் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சவால்களை உருவாக்கக்கூடும். எனவே பணம், வேலை, உடல்நலம் மற்றும் வாகன பயணம் போண்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய 3 ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் 12 வது வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தேவையற்ற செலவுகளை தவிர்த்து பணத்தை திட்டமிட்டு செலவிடுவது நல்லது. அதேபீல், மறைமுகமாக பிரச்சினைகளை ஏற்படுட்த்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல்நலத்திலும் சில பாதிப்புகள் ஏற்படலாம். அலுவலக்த்தில் உடன் பணியாற்றுபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மனதில் குழப்பமும் தன்னம்பிக்கை குறைவும் ஏற்படக்கூடும்.

மகரம்

மகர ராசியின் 8 வது வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வேலைப்பளுவும் நெருக்கடிகளும் ஏற்படலாம். குறிப்பாக, பணம் தொடர்பான நடவடிக்கைகளிலும் பரிவர்த்தனைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை கட்டுபடுத்துவது அவசியம். மேலும், வாகனங்களில் பணம் செய்யும் போது கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். சிறிய கவனக்குறைவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களின் 6ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதன் காரணமாக பணியிடத்தில் பல்வேறு சவால்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக, எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது அவசியம். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அதேசமயம், நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES