ஜோதிட சாஸ்த்திரன்படி, ஒருவரின் அறிவாற்றல், கல்வி, பேச்சுத்திறன் மற்றும் வணிக நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகமாக புதன் பார்க்கப்படுகிறார். புதனின் சஞ்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் புதன், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயர உள்ளார். விருச்சிக ராசி செவ்வாயின் ஆளுமைக்கு உட்பட்டது. செவ்வாய் தைரியம், ஆற்றல், செயல்திறன் மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இந்த நிலையில், புதன் செவ்வாயின் ராசியில் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, புதிய வருமானம் மற்றும் வியாபார லாபம் போன்ற விஷயங்களில் குறிப்பிட்ட 4 ராசிக்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த பெயர்ச்சி பொருளாதார ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கலாம். இதுவரை பணம் தொடர்பாக இருந்து வந்த சில சிக்கல்கள் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. கூறுதல் வருமானம் ஈட்டுவதற்கான முயற்சிகளும் கைகூடலாம். பணியிடத்தில் தங்களின் திறமையை நிரூபிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பணியிடத்தில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிப்பதுடன், உங்களின் செயல்பாடுகளும் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கக்கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம். குறிப்பாக, சந்தைப்படுத்துதல், ஊடகம் மற்றும் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக அமையலாம். உங்களின் புதிய யோசனைகள் மற்றும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பல்வேறு வகைகளில் முன்னேற்றத்தை கொடுக்கலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான சூழல் அமையும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் லாபம் ஈட்டக்கூடும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைப்பதால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். பணியிடத்தில் நீண்ட காலமாக மேற்கொண்டு வந்த உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகலாம். ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்த புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும், புதிதாக ஏற்படும் நட்புகள் மற்றும் அறிமுகங்கள் எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக அமையலாம்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)