அக்டோபர் 28ஆம் தேதியான இன்று, மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளில், உங்கள் ராசிக்கு என்ன பலன் இருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். திட்டமிட்ட காரியத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் சந்திப்புகள் உண்டாகும். வருமான வாய்ப்புகள் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தர்மக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றிச் செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும்.
தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் மேம்படும்.
புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். கலைப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் பிறக்கும்.
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும்.
ஆடம்பரமான விஷயங்களால் சேமிப்புகள் குறையும். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியமற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் விரயங்கள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும்.
தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்த இறுக்கம் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். பிள்ளைகளின் நலனில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அமையும்.
சில உதவிகள் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயலை சில தடைகளுக்குப் பின் முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தோர் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள்.
சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் நேரிடலாம். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கல்விப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)