TN Govt Announcement: தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்ற கல்வி கற்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான், சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு வழங்கி வருகிறது. 2026-27ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு தலா ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்கள் இந்த உதவித்தொகையினை பெற www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால், பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர், மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு படிக்க இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இளங்கலைப் படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2026-27ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அக்டோபர் 15, 2026 கடைசி தேதி, தற்போது நவம்பர் 9, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.