Rahu Ketu Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக ராகு, கேது அறியப்படுகிறார். ராகு கேது அசுப கிரகமாக கருதப்பட்டாலும், ராகு கேது பெயர்ச்சி பெரிதும் முக்கியம் பெறுகிறது. ராகு கேதுவின் நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
தற்போது ராகு பகவான் கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியில் இருக்கின்றன. தற்போது, கும்ப ராசியில் உள்ள ராகு மகர ராசியிலும், சிம்ம ராசியில் உள்ள கேது கடக ராசியிலும் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த பெயர்ச்ச்சி டிசம்பர் 5ஆம் தேத நடக்கிறது. டிசம்பர் மாதம் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு எவ்வாறு பாதிக்கும்,அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். மேஷ ராசியில் ராகு பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிலும் இருக்கும். இது வேலை, பணியிட மாறுதலுக்கு வழிவகுக்கும். புதிய பொறுப்புகள் பணியிடத்தில் கிடைக்கும். இருப்பினும், வீடு மற்றும் குடும்பத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள். வீடு அல்லது கார் வாங்குவது போன்ற முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். உங்களுக்கு இருந்த வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்கள் கைகூடும்.
ராகு பகவான் ரிஷப ராசியின் ஒன்பதாம் வீட்டிலும், கேது மூன்றாம் வீட்டிலும் பெயர்ச்சி அடையும். இதனால், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். முக்கிய முடிவுகளைக் கவனமாக எடுக்க வேண்டும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி சிக்கல்கள் தீரும். வீடு, வாகனம் வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். உங்களுக்கு இருந்த வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
மிதுன ராசியின் எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிலும் பெயர்ச்சி அடைகிறார். இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். நிதி சார்ந்த பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைபீர்கள். தொழிலில் சிறந்த லாபத்தை பெறுவீர்கள். முதலீடு மற்றும் கடன் தொடர்பான முடிவுகளில் கவனமாக இருப்பது சிறந்தது. செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும். பேசும்போது வார்த்தைகளைக் கவனம் தேவை. பணியிடத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
ராகு பகவான் கடக ராசியின் ஏழாம் வீட்டிலும், கேது முதல் வீட்டிலும் பெயர்ச்சி அடைகிறார். ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். திருமணம் கைகூடும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியுடன் முடிவுகளை எடுங்கள். மேலும், உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்து நிறைவேறும்.
ராகு பகவான் சிம்ம ராசியின் ஆறாம் வீட்டிலும், கேது பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சி அடையும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசியின் ஐந்தாம் வீட்டில் ராகுவுமம், பதினொன்றாம் வீட்டில் கேதுவும் பெயர்ச்சி அடைகிறார். கல்வி, கலை மற்றும் புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த வந்த நிதி சார்ந்த பிரச்னைகள் தீரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.
ராகு துலாம் ராசியின் நான்காம் வீட்டிலும், கேது பத்தாம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். வீடு, நிலம், கார் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப சொத்துகள் குறித்த சாதகமான செய்தி வரும். திருமணமாகதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்கள் நடக்கும். தொழில் வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். அல்லது புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புள்ளது. எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுப்பதற்கு முன் கவனமாக யோசியுங்கள்.
ராகு விருச்சிக ராசியின் மூன்றாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும் பெயர்ச்சி அடைகிறது. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் புதிய விஷயங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். நுட்பமான விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் ராகுவும், எட்டாம் வீட்டில் கேதுவும் இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். சிறுதொழில் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.
ராகு மகர ராசியின் முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் பிரவேசிப்பார்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும்.
ராகு கும்ப ராசியின் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும் இருப்பார்கள். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
ராகு மீன ராசியின் பதினொன்றாம் வீட்டிலும், கேது ஐந்தாம் வீட்டிலும் பிரவேசிப்பார்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வெளியூர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)