SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!

Rahu Peyarchi: ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பெயர்ச்சி அடைந்து இருப்பது சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். அடுத்த சில மாதங்களுக்கு 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்.

Written By Umabarkavi K
Published: Oct 08, 2026, 09:09 AM IST | Updated: Oct 08, 2026, 09:18 AM IST
Join

Rahu Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் அசுப கிரகமாக கருதப்படுவது ராகு பகவான். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராகுவின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்லை கொடுக்கும்.  ராகு பகவான் சமீபத்தில் தான் நட்சத்திர பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். அக்டோபர் 3ஆம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். அவிட்டம் நடசத்திரத்தின் அதிபதியாக செவ்வாய் கிரகம் இருக்கிறது. ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் அடுத்த சில மாதங்களுக்கு 3 ராசிகளுக்கு செல்வம் அதிர்ஷ்டம் உண்டாகும். எனவே அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கடகம் (Cancer Zodiac Sign)

அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் கட்டத்தில் ராகு பெயர்ச்சி அடைந்து இருப்பது கடக ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். 

கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் அறிமுகங்கள் உருவாகும். சகோதர வகையில் ஆதரவுகள் கிடைக்கும். வர்த்தகத் தொழிலில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில நிகழ்வுகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.

மேலும் படிக்க: ஆயில்யம் 4ஆம் பாதத்தில் குரு பெயர்ச்சி: நாளை முதல் 7 ராசிகளின் கொடி பறக்கும், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

சிம்மம் (Leo Zodiac Sign)

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். புதிய வீடு, வாகனம் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். வியாபார பணியில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். 

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் பிறக்கும். சக ஊழியர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.

மேலும் படிக்க: ஆயில்யம் 4ஆம் பாதத்தில் குரு பகவான்.. இந்த 3 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டம் தான்!

கும்பம் (Libra Zodiac Sign)

ராகு நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் செல்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அதிரடியான சில செயல்கள் மூலம் வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். 

எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமான உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: சனி நட்சத்திர பெயர்ச்சி: 3 நாட்களில் 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES