Shani Peyarchi: ஜோதிடத்தில் நீதி பகவான் என்று அழைக்கப்படுபவர்கள் சனி பகவான். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார்.
சுமார் 138 நாட்கள் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். அதன்பிறகு, டிசம்பர் 11ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, நேராக மீன ராசியில் பயணிக்க உள்ளார். டிசம்பர் 11 முதல் மீன ராசியில் நேர் பெயர்ச்சியை தொடங்குவது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். சனி பகவான் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மகர ராசியில் 3வது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், டிசமப்ர் முதல் மகர ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு கஷ்டங்கள் தீரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் உண்டாகும். முதலீடுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷப ராசியின் 11வது வீட்டில் சனி பகாவன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், ரிஷப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். உடன் ப பிறந்தவர்கள உதவி செய்வார்கள். எதிர்பார்த்த வழிகளில் இருந்து பணம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து அதிகப்படியான லாபத்தை பெறுவீர்கள். தேவையற்ற செலவுகள் கிடைக்கும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
பணியடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பணத்தை அதிகமாக சேமிக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் முதல் உங்கள் செலவுகள் குறையக்கூடும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
துலாம் ராசியின் 6வது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது.
வெளியூர் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. செல்லவாக்குமிக்க நபர்கள் மூலம் வெற்றியை காண்பீர்கள். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உஎதிர்பார்த்த வழிகளில் இருந்து பயணம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் முன்ற்றம் அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)