• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!

இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!

நியூசிலாந்து டி20 தொடரில் கடைசி 2 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் குறைகளை சரிசெய்து இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க கௌதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written ByR Balaji
Published: Nov 03, 2026, 11:10 AM IST|Updated: Nov 03, 2026, 11:14 AM IST
joinshare
இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

சிம்மத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: நவம்பர் 12 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

2

நேபாளத்தில் மோதிக்கொண்ட 2 ஹெலிகாப்டர்கள், ஒருவர் பலி: கதிகலங்க வைக்கும் வீடியோ

3

இந்திய அணியில் இனி இவர்களுக்கு இடமில்லை.. புவி நீக்கம்? கம்பீர் அதிரடி!

4

டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு! FL2 லைசென்ஸ் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு

5

தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 3 படங்கள்! சீன் to ராமாயணா..எதை எந்த தேதியில் பார்ப்பது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இத்தொடரில் இந்திய முதல் மூன்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற நிலையில், கடைசி 2 போட்டிகளில் தோல்விகளை தழுவியது கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், அடுத்தடுத்த டி20 போட்டிகளில் தற்போதுள்ள அணியில் இருந்து சிலரை நீக்கிவிட்டு, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வென்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக முதல் 2 போட்டிகளில் கடைசி ஓவர்கள் வரை போராடி வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 199 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 13.2 ஓவர்களில் எட்டியது. அபிஷேக் சர்மாவின் அதிரடி சதம் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.

நான்காவது போட்டியில் நியூசிலாந்து 259 ரன்கள் குவித்து இந்தியாவை வீழ்த்தியது. கடைசி போட்டியிலும் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா கைப்பற்றினாலும், அணியின் செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

புவனேஷ்வர் குமார், அக்சர் படேலுக்கு வாய்ப்பு

நியூசிலாந்து தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக புவனேஷ்வர் குமார் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததுடன், விக்கெட்டுகளை கைப்பற்றுவதிலும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து இந்திய அணி நிர்வாகம் மறுபரிசீலனை செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் அக்சர் படேலின் செயல்பாடுகளும் கேள்விக்குள்ளாகி உள்ளன. நியூசிலாந்து தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அவர், 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். போட்டிங்கிலும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. இதனால் அணியின் தேவைக்கு ஏற்ப அக்சர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷிவம் துபேவுக்கு பதிலாக நிதிஷ் ரெட்டி?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இடத்திற்கான போட்டியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஷிவம் துபே மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரின் செயல்பாடுகளை ஒப்பிட்டு அணித் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் ஷிவம் துபே 10 டி20 போட்டிகளில் விளையாடி, 6 இன்னிங்ஸ்களில் 121 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மறுபுறம் நிதிஷ் குமார் ரெட்டி 7 டி20 இன்னிங்ஸ்களில் 159.52 ஸ்டரைக் ரேட்டில் 134 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 7 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய நிதிஷ் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், ஷிவம் துபேவின் இடம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பந்துவீச்சு, பீல்டிங்கில் கவனம் செலுத்தும் கம்பீர்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பிரிவுகளில் முன்னேற்றம் தேவைப்படுவதாக அணியின் செயல்பாடுகள் காட்டுகின்றன. அர்ஷ்தீப் சிங் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் பந்துவீச்சு அணியை வலுப்படுத்த புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

மேலும், பீல்டிங்கிலும் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கம்பீர் விரும்புவதாக கூறப்படுகிறது. கேட்சுகளை தவறவிடுவது ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் போவது போன்ற தவறுகளை குறைக்க கூடுதல் பயிற்சி வழங்கப்படலாம்.

2028 டி20 உலகக் கோப்பையை குறிவைக்கும் இந்தியா

2028 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் மற்றும் பிளேயிங் லெவன் இறுதி செய்யும் திட்டத்தில் அணி நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்காக, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதுடன், ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளையும் கண்காணித்து அணியில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், கடைசி 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகள் அணியின் குறைகளை வெளிப்படுத்தியுள்ளன. இதனால், அடுத்தடுத்த டி20 போட்டிகளில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket